தமிழில் பேசி அசத்திய சந்திரபாபு நாயுடு…. கருணாநிதிக்கு புகழாரம் !!

By Selvanayagam PFirst Published Dec 17, 2018, 11:19 AM IST
Highlights

சென்னை அணணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, தமிழகத்தில் உள்ள அரசை மத்திண அரசு ரிமோட் கண்ட்ரோல் மூலக் இயக்கவதாக தெரிவித்தார். சந்திர பாபு நாயுடு பேசத் தொடங்கும்போது தமிழில் பேசி அசத்தினார்.

சென்னையில் கருணாநிதியின் சிலை திறப்பு விழ நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா பங்கேற்று சிலையைத் திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கினார். தென் பாரதமே மிகவும் பெருமை கொள்ளும் நாள் இது. சென்னை கடல் அலைகள் மகிழ்ச்சி கொள்ளும் தருணம். இந்திய நாட்டின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதியின் திரு உருவச் சிலையை சென்னை மாநகரில் திறந்துவைத்துள்ளோம். இப்பெரும் விழாவில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

இந்த முறை அந்த அலை தி.மு.க பக்கம் வீசுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி தமிழகத்தின் 40 இடங்களிலும் வெற்றி பெறும். அப்போதுதான், கருணாநிதியின் ஆன்மா உண்மையில் ஓய்வு கொள்ளும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

click me!