கருணாநிதி நினைவிட திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணித்ததா.? கூட்டணியில் பிளவா.? செல்வப்பெருந்தகை விளக்கம்

By Ajmal Khan  |  First Published Feb 28, 2024, 2:12 PM IST

திமுகவிற்கும் காங்கிரஸ் இருக்கும் இடையே கருத்து வேறுபாடு இழுபறியோ எதுவும் இல்லையென தெரிவித்த செல்வப்பெருந்தகை, ,மு க ஸ்டாலினும், ராகுல் காந்தியும் உடன்பிறவா சகோதரர்கள் போல் உறவு வைத்துள்ளார்கள் அதை பிரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
 


திமுக- காங் கூட்டணி பிளவா.?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காமல் உள்ளது. இதனிடையே கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்தநிலையில் டெல்லி மேலிட தலைவர்களை சந்தித்த பிறகு சென்னை திரும்பிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

Tap to resize

Latest Videos

அப்போது அவரிடம்  திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு காலதாமதம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி ஐந்து முறையாக வெற்றி கூட்டணியாக உள்ளது.  பேச்சு வார்த்தை டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ராகுலும் ஸ்டாலினும் உடன்பிறவா சகோதரர்கள்

எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. திமுகவிற்கும் காங்கிரஸ் இருக்கும் இடையே கருத்து வேறுபாடு இழுபறியோ எதுவும் இல்லையென தெரிவித்தவர், முந்தைய தேர்தல் காலங்களிலும் கடைசி நேரத்திலேயே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக கூறினார்.  எங்களுக்குள் பிரச்சனை இருப்பது போல் பத்திரிகைகள் பேசுவது ஏற்புடையதாக  இல்லை முதலமைச்சர் மு க ஸ்டாலினும், ராகுல் காந்தியும் உடன்பிறவா சகோதரர்கள் போல் உறவு வைத்துள்ளார்கள் அதை பிரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். யூகங்களின் அடிப்படையில் பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன்  அங்கீகரிக்கக்கப்படாத செய்திகளை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தினார். 

கருணாநிதி நினைவிடம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்கவில்லை என்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலமைச்சரிடமும்  அமைச்சரிடமும் ஏற்கனவே பேசிவிட்டு முன்பே அறிவித்துவிட்டு தான் எங்களுடைய திட்டமிடல் இருந்தது.  ஆலோசனைக் கூட்டம் இருந்ததால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக டெல்லி செல்ல வேண்டியது இருந்தது. அதுமட்டுமின்றி முன்னாள் தலைவர்கள் ஈவிகேஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி, தங்கபாலு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என கூறிவிட்டு தான் சென்றோம்.  அனைவரும் கலந்து கொண்டு தான் இருந்திருக்கிறார்கள் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

நான் பா.ஜ.கவில் இணையப்போறேனா.? செருப்பால் அடிப்பேன்.! செய்தியாளர்களிடம் சீறிய திருநாவுக்கரசர்

click me!