நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நடிகை கஸ்தூரி திடீரென சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருதையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முன்னாள் அமைச்சர்களுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அதிமுக பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில் நேற்று திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடிகை கஸ்தூரி திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு சிறிது நேரம் நீடித்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி, ராஜ் சத்யன் உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது இருவரும் தற்போதைய அரசியல் குறித்து பேசினார்களா? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
இதையும் படிங்க: அடுத்தடுத்து சிக்கும் திமுக அமைச்சர்கள்.. தப்புவாரா தங்கம் தென்னரசு? 3 நாள் டைம் கொடுத்த நீதிபதி.!