ஆளுநர் என்பவர் ஆளநராக செயல்பட வேண்டும் ஓர் சர்வாதிகாரி போல் செயலாற்ற கூடாது..! எச்சரிக்கும் காங்கிரஸ்

Published : Apr 07, 2023, 08:42 AM IST
ஆளுநர் என்பவர் ஆளநராக செயல்பட வேண்டும் ஓர் சர்வாதிகாரி போல் செயலாற்ற கூடாது..! எச்சரிக்கும் காங்கிரஸ்

சுருக்கம்

ஆளுநர் ஆர்என் ரவி சட்டமன்றம் தொடர்பாகவும், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து அவர் வகிக்கும் பதவிக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் அவர் செய்யும் துரோகம் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் சர்ச்சை பேச்சு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடிமை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் இன்று கலந்துரையாடல் நடத்தினார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அது சரியாக இருந்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இரண்டாவது, சரியான மசோதா இல்லை என்றால் அந்த மசோதாவை நிறுத்தி வைப்பது. நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பேசியவர், தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையானது நாட்டின் 40 சதவீத காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள்

இந்தநிலையில் தான் நாட்டின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்ததாக தெரிவித்தார். இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது அரசமைப்புச்சட்ட நடைமுறைப்படி, அமைச்சரவை அல்லது சட்டப்பேரவையின் முடிவுக்கு மேலான அதிகாரம் உள்ளவராக ஓர் ஆளுநர் செயல்பட முடியாது என்பது என்பது மிகவும் சாத்தியமான உண்மை.

ஆளுநர் பதவிக்கு அழகல்ல

ஆளுநர் பொறுப்புக்குச் சிறிதும் பொருத்தமற்ற வகையில் அதிகாரத்தை பொது வெளியில் பேசுவதை ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆளுநர் என்பவர் ஆளநராக செயல்பட வேண்டும் ஓர் சர்வாதிகாரி போல் செயலாற்றவது தமிழ்நாட்டில் இன்று அல்ல எப்பொழுதும் அவர் கருத்துக்களை திணிக்க முடியாது. இன்று ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து அவர் வகிக்கும் பதவிக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் அவர் செய்யும் துரோகம், குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான ஆளுநரின் கருத்து என்பது அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் பேசியிருக்கும் கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதையும் படியுங்கள்

மக்களை தூண்டிவிட்டே ஸ்டெர்லைட் ஆலையை மூடினர் - ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!