உதயசூரியன் சின்னத்தில் நின்றதாலேயே என்னை கேலி, கிண்டல் செய்கின்றனர்.! வேல்முருகன் வேதனை

By Ajmal Khan  |  First Published Apr 7, 2023, 8:12 AM IST

உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக குத்தி காட்டுவதும், கேலி,கிண்டல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள வேல்முருகன், மிரட்டுகிறேன் என்ற வார்த்தையை அவை குறிப்புகளை பதிவு செய்வதை சபாநாயகர் அப்பாவு தவிர்த்து கொள்ள வேண்டும் என வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்
 


சபாநாயகர்- வேல்முருகன் மோதல்

சட்டமன்றத்தில் நேற்று  கேள்வி நேரத்தின்போது தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என திமுக கூட்டணி கட்சியான  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோவமாக சத்தம் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு,  பேரவையில் இப்படி எல்லாம் பெரிய சத்தம் எழுப்பக்கூடாது. உங்களுக்கு பலமுறை கேள்வி கேட்க வாய்ப்பு கொடுத்துவிட்டேன். ஆனால் இங்கே ஒரு கேள்வி கூட கேட்காமல் பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள் எனவே  உங்களுக்கு திரும்பத் திரும்ப வாய்ப்புகள் வழங்கப்படாது என மிகக் கடுமையாக கண்டித்தார். மிரட்டுவது போல் பேச வேண்டாம் என எச்சரிந்திருந்தார். இதனையடுத்து வெளியே சென்ற வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சட்டசபையில் மூத்த உறுப்பினராக நான் உள்ளேன். 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

Tap to resize

Latest Videos

கேள்வி கேட்க வாய்ப்பு மறுப்பு

தினந்தோறும் சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் காலை சென்று சந்திப்பேன். அப்போது இன்று நான் கொண்டுவரவுள்ள கவன ஈர்ப்பு தொடர்பாகவும், துணை கேள்வி தொடர்பாகவும் தெரிவிப்பேன். அதே போலத்தான் எங்கள் தொகுதியில் பொதுமக்கள் வசதிக்காக பேருந்து விட வேண்டும் என்ற கேள்வி கேட்க இருப்பதாக கூறினேன். அதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் சபையில் பேச அனுமதிக்கவில்லை. நேற்றைய தினம் பொதுப்பணித்துறை தொடர்பாக கேள்வி கேட்க வாய்ப்பு கேட்டேன்.ஆனால் அமைச்சர் துரைமுருகன் மூத்த அமைச்சர் அவரிடம் நிறைய கேள்விகளை கேட்க முடியாது என கூறிவிட்டார். இந்தநிலையில் தான் நேற்று நான் கேள்வி கேட்கும் பொழுது வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் சபாநாயகர் நான் மிரட்டுவதாக கூறுகிறார். கையை நீட்டி கண்டிக்கிறார். இது சபாநாயகர் இருக்கைக்கும் மான்புக்கும் அழகல்ல என தெரிவித்தார். 

கேலி, கிண்டல் செய்கின்றனர்

சபாநாயகரை நான் மிரட்டுவதாக அவை குறிப்பில் ஏற்றப்படுகிறது. இது வெளியில் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பேரவை தலைவர் இந்த நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர்கள் எதிர்கட்சி தலைவர்கள் வரிசையில் அமர்ந்து கேள்வி கேட்பதும், வெளிநடப்பு செய்ததும் உண்டு. இது தான் ஜனநாயகம் என தெரிவித்தார். உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக குத்தி காட்டுவதும், கேலி,கிண்டல் செய்வதும் தயவு செய்து பேரவை தலைவர்கள் இனி இது போன்ற வார்த்தைகளை அவை குறிப்புகளை பதிவு செய்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். மூத்த உறுப்பினர் என்றால் முன் வரிசை கொடுக்க வேண்டும். ஆனால் எந்தவித விதிகளும் இல்லாமல் முன் வரிசையில் கடைசி இருக்கை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. என்னை விட ஜூனியருக்கு முன் இருக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.  

இதையும் படியுங்கள்

தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டம்..! அழைப்பு விடுத்த வேல்முருகன்

click me!