இரட்டை இலை சின்னம், அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம் என்று வந்தால் அது இரட்டை இலைக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் பிடித்த கெட்ட நேரம். கட்சியில் துரோகம் இழைத்ததால் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார்.
இரட்டை இலை சின்னம் சினிமா வில்லன்கள் நம்பியார், வீரப்பா கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்;- காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். மக்கள் விரும்பாதா எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவரக்கூடாது. இதுதான் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. பூமிக்கு கீழே வைரமே கிடைத்தாலும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் பாரம்பரியாக செய்து வருகின்ற விவசாயம் தான் வேண்டும். இந்த விஷயத்தில் தேவையற்ற அரசியல் செய்ய வேண்டாம். தமிழ்நாட்டை பாதிக்கின்ற எந்த திட்டமும் வரக்கூடாது. அப்படி மீறி வருவதை தமிழக அரசும் அனுமதிக்கக்கூடாது.
undefined
இதையும் படிங்க;- இபிஎஸ்ஸால் பொறுத்து கொள்ள முடியாமல்.. போகிறபோக்கிலே புழுதிவாரி தூற்றுகிறார்.. அமைச்சர் தங்கம் தென்னரசு..!
ஒரு வேலை நீதிமன்றம் இரட்டை இலையும், அதிமுகவும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம் என்று வந்தால் அது அந்த கட்சி அழிவை தான் உண்டாக்கும். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கிய அதிமுக கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. எம்.ஜி.ஆர். கையில் இருந்த இரட்டை இலை சின்னம் சினிமா வில்லன்கள் நம்பியார், வீரப்பா கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
இரட்டை இலை சின்னம், அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம் என்று வந்தால் அது இரட்டை இலைக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் பிடித்த கெட்ட நேரம். கட்சியில் துரோகம் இழைத்ததால் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார். ஆனால் துரோகத்தின் மூலமாகவே பொறுப்புக்கு வந்த ஒருவரை இயற்கையும் அனுமதிக்காது. அவரை நிச்சயம் தொண்டர்களும் புறக்கணிப்பார்கள்.
இதையும் படிங்க;- இதை மட்டும் ஸ்டாலின் செய்தால் வீடு தேடி சென்று பாராட்ட தயாராக இருக்கிறேன்.. ஒரே போடு போட்ட வானதி சீனிவாசன்.!
துரோகத்தால் வாழ்ந்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் ஓரணியில் திரண்டு ஜனநாயக ரீதியாக போரிட்டால் தான் திமுக என்கின்ற தீயசக்தியை வீழ்த்த முடியும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.