
மன்னர் காலத்து நையாண்டி கதைகளில், யானைக்கு கோவணம் தைக்க இத்தனை வராகன் செலவு, கோபுரத்துக்கு துணி உரை தைக்க இத்தனை கழஞ்சி செலவு என்று சொல்லப்படுவதுண்டு.
அதற்கு, சற்றும் குறைவில்லாமல், வைகை ஆணை நீர் ஆவியாகாமல் இருக்க 10 லட்ச ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது தெர்மாகோல் திட்டம்.
தெர்மாகோலை தண்ணீரில் மிதக்கவிட்டால், தண்ணீர் ஆவியாகாது என்பது உண்மைதான், ஆனால் அணையிலும், ஏரியிலும் மிதக்க விட்டால் கரை ஒதுங்காதா என்ன?.
தெர்மாகோலுக்கு தெரியுமா? நம்மை மிதக்க விடுபவர் அமைச்சர் செல்லூர் ராஜு என்று?
அதனால்தான், அவர் மிதக்க விட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை தெர்மாகோல் அட்டைகளும் கரை ஒதுங்கி, அவரை பார்த்து நகைக்க ஆரம்பித்து விட்டன.
எவ்வளவு தொலை நோக்கு சிந்தனை உள்ள திட்டம் பாருங்கள்? இந்த திட்டத்தை பாராட்டி ஐ.நா சபையே விருது கொடுத்தாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை.
ஐ.நா விருது கொடுப்பது இருக்கட்டும், அதற்கு முன் நமது நெட்டிசன்கள் எல்லாம், சமூக வலைத்தளங்களில் வகை வகையாய் விருது கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதில் சிலவற்றை பார்ப்போம்.
"வைகை ஆணை நீரை தெர்மாகோல் கொண்டு மூடியதால் இன்று முதல் செல்லூர் ராஜுவாகிய நீ இனி தெர்மாகோல் ராஜு என்று அழைக்கப்படுவாய்"
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நவீன முறையில் செயல்படுத்த 2 கிலோ சர்க்கரையை கடலில் கலக்கப்போவதாக அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பு
இறந்தவர்கள் ஆவியாகாமல் தடுக்கவும் தெர்மாகோல் பயண்படுத்தலாம்...அமைச்சர் செல்லூர் ராஜு அரிய கண்டுபிடிப்பு...
முருங்கை பிசினை கொண்டு ஓசோன் ஓட்டை அடைக்கும் பணி
150 கோடி செலவில் விரைவில் - செல்லூர் ராஜு புது ஐடியா
உலக நீர் மேலாண்மை குழு தலைவராக தலைமை ஏற்க
அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கு ஐ.நா அழைப்பு.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நவீன முறையில் செயல்படுத்த 2 கிலோ சர்க்கரையை கடலில் கலக்கப்போவதாக அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி அறிவிப்பு
கூகுளில் செல்லூர் ராஜு என்று அடித்தால் தெர்மாகோல் வருது..
உலக நீர் மேலாண்மை குழு தலைவராக தலைமை ஏற்க
அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களுக்கு ஐ.நா அழைப்பு.
முருங்கை பிசினை கொண்டு ஓசோன் ஓட்டை அடைக்கும் பணி
150 கோடி செலவில் விரைவில் - செல்லூர் ராஜு புது ஐடியா
தெர்மாகோல் விற்பணை அதிகரித்து இருப்பதால் தமிழக வியாபாரிகள் கண்ணீர் மல்க அமைச்சர் செல்லூர் ராஜு க்கு நன்றி
"முல்லைக்கு தேர் கொடுத்தால் அது முடியாட்சி, வைகைக்கு தெர்மாகோல் கொடுத்தால் அது குடியாட்சி"
"தமிழ்நாட்டுலேயே, ஏன் இந்தியாவுலே, இல்லையில்லை உலகத்திலேயே அணையை தெர்மாகோல் அட்டைகள் மூலம் மூடிய அமைச்சர் நம்ம செல்லூர் ராஜூ தான்"
"அடுத்து வெயிலின் தாக்கத்தை குறைக்க 100000கோடி செலவில்
வானத்தை தார் பாய் விரித்து மறைக்கும் திட்டத்தை திரு.செல்லூர் ராஜூ அறிமுகம் செய்வார்"
இப்படி என்னென்னவோ மீம்ஸ்கள் வலம் வருகின்றன. அதி எல்லாம் படித்து நமது அரசு மற்றும் அமைச்சர்களின் சாதுர்யத்தை உலகமெல்லாம் பரப்புங்கள். அது தமிழர்களுக்கு எல்லாம் பெருமை சேர்க்கும்.