அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தரப்புக்கும் தினகரன் தரப்புக்கும் மோதல் - 6 பேர் மீது வழக்கு பதிவு

Asianet News Tamil  
Published : Apr 22, 2017, 05:05 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தரப்புக்கும் தினகரன் தரப்புக்கும் மோதல் - 6 பேர் மீது வழக்கு பதிவு

சுருக்கம்

crisis between dinakaran and natarajan supporters

திருச்சியில் அமைச்சர் நடராஜன் தரப்புக்கும் தினகரன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பந்தமாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வெல்லமண்டி நடராஜன் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார். இவர் திருச்சி மாநகர் மாவட்ட அவை தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் கட்சியில் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அமைச்சர் நடராஜனை பதவி விலக கோரி தினகரனின் ஆதரவாளர் ராஜராஜ சோழன் உள்ளிட்டோர் அவரிடமே மனு அளித்தனர்.

இதனால் திருச்சியில் அமைச்சர் நடராஜன் தரப்புக்கும் தினகரன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். தொடர்ந்து மோதல் சம்பவம் தொடர்பாக, கோட்டை காவல் நிலைய போலீஸார் ராஜராஜ சோழன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மிரட்டுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?
ஓபன் சேலஞ்ஜ்-க்கு தயார்..! என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்..!