அதிமுகவின் எதிர்காலம் பிரகாசம்..! விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் - செல்லூர் ராஜூ நம்பிக்கை

By Ajmal KhanFirst Published Jan 1, 2023, 11:08 AM IST
Highlights

மகளிர்களுக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் என்ன ஆனது என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்திருந்தால் இதுவரை 22ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு திமுக அரசு கொடுத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

விரைவில் அதிமுக ஆட்சி

புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினரோடு சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி அம்மனை வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.  அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக தெரிவித்தவர்,  அதிமுக ஆட்சி விரைவில் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறினார்.

இருளும் சோகமும் விலகி புதிய ஆண்டு பிரகாசிக்கட்டும்.!ஒன்றுபட்டு நிற்போம்,ஓயாது உழைப்போம்-இபிஎஸ்,ஓபிஎஸ் வாழ்த்து

விரைவில் மாநாடு

2022ல் திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்கமுடியாத கல்வெட்டாக உள்ளதாகவும், அதிமுகவிற்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமாக இருக்கும் என கூறினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி விரைவில் மிகப் பெரிய அளவில் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். தனி மனிதர், தனி குடும்பம் என்பது இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாட்சியாக அதிமுக செயல்படுகிறது என குறிப்பிட்டார். வரும் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும், புதிய வைரஸ் தொற்று இல்லாத ஆண்டாக மாற வேண்டும் என கூறினார்.

மகளிர் உரிமை தொகை எங்கே.?

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிர்களுக்கும் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தார்கள்.  திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை மாதம் ஆயிரம் ரூபாய் என்று வழங்கியிருந்தாலும், சிலிண்டர் மானியம் மாதம் 100 என கணக்கிட்டால் இதுவரை ஒவ்வொரு மகளிர்களுக்கும் திமுக அரசு 22ஆயிரம் கொடுத்திருக்கனும் ஆனால் கொடுக்கவில்லை என விமர்சித்தார்.  இப்போது பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய்க்கே தடுமாறியிருப்பதாக கூறினார். 33 ரூபாய்க்கு எத்தனை அடி கரும்பு கொள்முதல் செய்து. எத்தனை அடி பொதுமக்களுக்கு வழங்குவார்கள் என தெரியவில்லை. திமுக அரசு பல்வேறு வரி உயர்வு, விலைவாசி உயர்வுக்கு பின்னர் அறிவித்த பொங்கல் பரிசு அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போலதான் உள்ளது என குற்றம்சாட்டினார். 

இதையும் படியுங்கள்

காவல் அதிகாரிகள் தலைமை அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம்..! திடீர் உத்தரவிட்ட டிஜிபி- என்ன காரணம் தெரியுமா.?

click me!