ஆ. ராசா விவகாரத்தில் வாய்மொழி மௌனியாக ஸ்டாலின் ஏன் இருந்து வருகிறார். 2 ஜீ ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழலில் பெரும்பகுதியை ஸ்டாலினுக்கு ஆ.ராசா கொடுத்திருப்பாரோ என்கின்ற சந்தேகம் ஏற்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் காய்ச்சல் அதிகரிப்பு
மதுரையில் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் கழிப்பறை கட்டுதல் , அங்கன்வாடி கட்டுதல் மையம் ஆகியவற்றுக்கான பூமி பூஜை விழாவானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் புதிய தொற்றுநோய் பரவல் அதிகமாக இருந்து வருகிறது, இதற்கு அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்து மாத்திரைகள் இல்லை, பன்றி காய்ச்சல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வருகிறது. தொற்றுப் பரவல் காரணமாக ஏற்படுகிற காய்ச்சலுக்கு உரிய மருந்து மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டவருடைய எண்ணிக்கை மதுரையில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக தெரிவித்தார். எனவே மதுரை பகுதியில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர், சுகாதார மாவட்ட அலுவலர் ,மாநகராட்சி ஆணையாளர் என மூவர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்...! அண்ணாமலையின் உதவியாளரை அதிரடியாக கைது செய்த போலீஸ்
ஆ.ராசாவிற்கு வாய்ப்பூட்டு
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஊர் ஊராக செல்வதை தவிர்த்து விட்டு உதயநிதிக்கு மெய் காப்பாளராக செல்வதை விட்டுவிட்டு, பள்ளிகளுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவர் தாய் தான் வருத்தப்பட வேண்டும், ராஜா என்ற பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் விமர்சித்தார். சட்டம் ஒழுங்கு ஏற்கனவே கேலிக்கூத்தாக இருக்கக்கூடிய நிலையில் ஊடகங்கள் அனைத்திலும் ராஜா குறித்த பேச்சுக்கு கண்டனங்கள் தான் வருகின்றன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் பிறப்பை குறித்தும் ஆ.ராசா தவறாக பேசியிருக்கிறார். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் ஆ. ராஜாவிற்கு வாய் பூட்டு போட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ராஜா விவகாரத்தில் வாய்மொழி மௌனியாக ஸ்டாலின் ஏன் இருந்து வருகிறார்.
2 ஜீ ஊழல் பணத்தில் ஸ்டாலினுக்கு பங்கா..?
2 ஜீ ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழலில் பெரும்பகுதியை ஸ்டாலினுக்கு ஆ.ராசா கொடுத்திருப்பாரோ என்கின்ற சந்தேகம் ஏற்படுவதாக தெரிவித்தார். தமிழர்களைப் பொறுத்தவரை ஜாதி மதம் பார்க்காமல் நாம் பழகி வருகிறோம், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் உடைய நிலைப்பாடு என்ன ?? எந்த தவறு நடந்தாலும் குரல் கொடுக்க தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உண்டியல் குலுக்குவதை விட்டுவிட்டு திமுகவின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகிறார்களா என கேள்வி எழுப்பினார். திருமாவளவன் உட்பட அனைவரும் மௌனமாக இருக்கிறார்கள் தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற நிலை இல்லாமல் போய்விட்டதாகவும் செல்லூர் ராஜூ குற்றமசாட்டினார்.
இதையும் படியுங்கள்
பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது..! திமுகவின் அலட்சியப் போக்கே காரணம்- ஓபிஎஸ் குற்றச்சாட்டு