ஏ.வ.வேலு உடன் மோதிய செல்லூர் ராஜு - அமளி துமளி ஆன சட்டசபை...

First Published Jun 16, 2017, 1:02 PM IST
Highlights
Sellur Raju fight with DMK MLA E.V.Velu at Assembly


தமிழக சட்டமன்றத்தில் இன்று 3வது நாளாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது திமுக எம்எல்ஏ எ.வ.வேலு பேசியபோது, உணவு துறை அமைச்சர் குறுக்கீடு செய்தார். இதனால், சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் இன்று 3வது நாளாக மானிய கோரிக்கை மீதான விவாதாம் நடந்து வருகிறது. அதில் உணவு துறை மானிய கோரிக்கை குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

தமிழக அரசு, அறிவிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய அனுமதி அளித்துள்ளதா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு, மத்திய அரசின் அனுமதி ஏற்கனவே கிடைத்துவிட்டது. தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கனவே ஏற்று கொண்டது. அதன்படியே அமல் படுத்தியுள்ளோம் என அமைச்சர் கூறினார்.

அதை தொடர்ந்து திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, தனது பேச்சை தொடங்கினார். அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜு குறுக்கீடு செய்து பேசினார். இதனால், எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர். இதையொட்டி அங்கு அமளி ஏற்பட்டது.

எம்எல்ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து பேச அனுமதிக்காததால், திமுக உறுப்பினர்கள், மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். ஆனால், மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்காக திமுக உறுப்பினர் எ.வ.வேலு சட்டமன்றத்தைவிட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

click me!