ரேஷன்கார்டுக்கு ரூ.50,000... மக்கள் எதிர்பார்ப்பில் தெர்மகோல் விட்ட செல்லூர் ராஜு... டி.டி.வி.தினகரன் வேதனை..!

Published : Jun 05, 2020, 01:58 PM IST
ரேஷன்கார்டுக்கு ரூ.50,000... மக்கள் எதிர்பார்ப்பில் தெர்மகோல் விட்ட செல்லூர் ராஜு... டி.டி.வி.தினகரன் வேதனை..!

சுருக்கம்

குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு  ரூ.50,000 கடன் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூவின் அறிவிப்பால் ஏமாற்றமே மக்களுக்கு மிஞ்சுவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.   

குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு  ரூ.50,000 கடன் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூவின் அறிவிப்பால் ஏமாற்றமே மக்களுக்கு மிஞ்சுவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும். 350 நாட்களுக்குள் அந்தக் கடனை திருப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல் படி வங்கிகளில் கடன் வழங்க எளிமையான நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து இருந்தனர்.

ஆனால் கூட்டுறவுத் துறை அமைச்சரின்ப் இந்த அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன. அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாகத் தகவல்கள் வருகின்றன. கரோனா துயரால் ஏற்கெனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது.

அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன ? என்பனவற்றை எல்லாம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!