ரேலா மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர் விஜயபாஸ்கர்.. ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்..!

By vinoth kumarFirst Published Jun 5, 2020, 1:49 PM IST
Highlights

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறலோடு நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக  தகவல் வெளியானது. 

இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இதற்கு முன்னதாக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர் ரேலாவிடம் தமிழக முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம்  கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!