ஒட்டுமொத்த பக்தர்களின் விருப்பமாக சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள் அதனடிப்படையில் ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக பணிகள் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தீட்சிதர்கள் என்றாலே பிரச்சனை தான்
அறநிலையத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவில்களில் பெருந்திட்ட வரைவு பணிகள் பெரியபாளையம், திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம், வள்ளலார் நிலையம், பழனி, இருக்கன்குடி, திருவேற்காடு உள்ளிட்ட கோவில்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 5 கோவில்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு பணிகள் குறித்த ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சிதம்பரம் தீச்சதர் தொடர் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தீச்சிதர்கள் என்றாலே பிரச்சனை தான், சிதம்பரம் கோவிலில் அதிகார மையத்தை ஏற்படுத்தி செயல்படுகிறார்கள். சிதம்பரம் திருக்கோவிலை தணிக்கை செய்யக்கூட அனுமதிக்க மறுக்கிறார்கள். விலை உயர்ந்த நகைகள் வரவு வைக்கப்பட்டது தொடர்பான தகவல்களை தெரிவிக்க மறுக்கிறார்கள்.
அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை
இது அவர்களின் சொந்த நிறுவனம் போல் நினைக்கிறார்கள். மக்களின் ஆதரவால் நடக்கும் கோவில் அரசுக்கு தகவல் தரமறுக்கிறார்கள். பக்தர்களை நீதிமன்ற தீர்ப்பீன் படி கனகசபையின் மீது நின்று சாமி கும்பிட நியாயத்தின் படி அனுமதிக்கின்றோம். சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிப்போம் என கூறினார். ஒட்டுமொத்த பக்தர்களின் விருப்பப்படி சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள் அதனடிப்படையில் ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக பணிகள் நடைபெறும் என கூறினார். சிதம்பரம் நடராசர் கோவிலில் உண்டியல் உள்ளதா? வைப்பு நிதி குறித்தும் இதுவரை கணக்கு இல்லை. அந்த காலத்திலிருந்து இப்போது வரை உள்ள நகைகள் குறித்து கணக்கு காட்ட வில்லையென தெரிவித்தார்.
சிலைகள் மீட்பு
திமுக ஆட்சி வந்த பிறகு 286 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஆட்சியிலும் இவ்வளவு சிலைகள் மீட்கப்பட்டவில்லை. திருடுபோன சிலைகளை மீட்பது மட்டுமல்லாமல் இருக்கின்ற சிலைகளை பாதுகாக்கவும் க்யூ ஆர் கோடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். மேலும் ஸ்டாக்ங் ரூம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை மீது ஏதேனும் குற்றம் சொல்ல பூதக்கண்ணாடி வைத்து பார்க்கிறார்கள். இந்த ஆட்சியில் தான் அதிகளவு குடமுழுக்கு , நிலங்கள் மீட்பு, கிராமபுற கோவில்கள் ஆதிதிராவிடர் பழங்குடினர் பகுதி கோவில்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
மாற்று மதத்தினருக்கு அனுமதி
பழனி கோயிலில் மாற்று மதத்தினர் சென்றது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்த கோவிலுக்கு சென்றாலும் விருப்பப்பட்டு செல்பவர்களுக்கு வேறு ஏதும் அடையாளத்தோடு அல்லாமல் வந்தால் அனுமதிக்கிறோம். சகோதரர் சகோதரியாக வாழும் நாட்டில் பிளவுக்கு அனுமதிக்கமாட்டோம். மத அடையாளமின்றி வருபவர்களுக்கு கோயிலில் அனுமதி உண்டு என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
பெரியார் பல்கலைக்கழகத்திலையே கருப்பு சட்டைக்கு தடையா..! ஆளுநர் வருகையால் வெளியான உத்தரவால் பரபரப்பு