நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என கூறினார். நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சட்ட விரோத காவலில் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது சட்டவிரோதமானது என தெரிவித்தவர், இயந்திரதனமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
மேலும் கைது மெமோவில் கையெழுத்திட செந்தில் பாலாஜி மறுத்தார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என கேள்வி எழுப்பினார். அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. கஸ்டம்ஸ் சட்டம், ஜிஎஸ்டி சட்டம், என்.டி.பி.எஸ் சட்டங்களில் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது
பணம் வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது
ஆனால், அமலாக்கத்துறைக்கு நாடாளுமன்றம் அப்படி எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை என தெரிவித்தார். நாடாளுமன்றமே வழங்காத ஒரு அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என கூறினார். இதனை தொடர்ந்து வாதிட்ட அமலாக்கத்துறை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது, அதன் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார். உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும்,
ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை என கூறினார். நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது என அமலாக்கத்துறை தரப்பு சார்பில் வாதிடப்பட்டது.
இதையும் படியுங்கள்