என்னிடம் தெய்வ சக்தி இருப்பதால் மனித சூழ்ச்சி பலிக்காது. சர்ச்சை டைரி பற்றி சவால்விடும் சேகர் ரெட்டி..!

Published : Oct 04, 2021, 12:04 PM IST
என்னிடம் தெய்வ சக்தி இருப்பதால் மனித சூழ்ச்சி பலிக்காது. சர்ச்சை டைரி பற்றி சவால்விடும் சேகர் ரெட்டி..!

சுருக்கம்

டைரி புகார் என்பது கற்பனையானது. மனித சூழ்ச்சிகள் என்னிடம் வெற்றி பெறாது என்று சேகர் ரெட்டி கூறியுள்ளார்.

டைரி புகார் என்பது கற்பனையானது. மனித சூழ்ச்சிகள் என்னிடம் வெற்றி பெறாது என்று சேகர் ரெட்டி கூறியுள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் கட்டுக்கட்டாக புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிமுக அமைச்சர்களுக்கு அவர் நெருக்கமாக இருந்தநிலையில் சோதனையில் முக்கிய டைரி சிக்கியதாகக் கூறப்பட்டது. இந்தநிலையில் சேகர் ரெட்டியின் டையிரியில் முன்னாள் அமைச்சர்கள் பலரது பெயரும் உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இந்தநிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனைக் குழு தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். சென்னை, யாகராய நகர்  பெருமாள் கோயிலில் பதவியேற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி சிறப்பாக செயல்படுவதாக தெய்வித்தார். மேலும் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு வழியில் ஏற்படும் சிரமங்களை போக்க 25 முதல் 30 கிலோ மீட்டர்க்கு இடையில் இலவச தங்கும் விடுதிகள் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட உள்ளதகவும் அவர் தெரிவித்தார்.

அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டைரி புகார் குறித்து விளக்கம் அளித்த சேகர் ரெட்டி அது ஒரு கற்பனை என்றார். யாரோ சிலர் இதுபோன்று கூறி வருவதால் பிரச்சினை இல்லை. உயர் பதவிகளுக்கு வந்தால் சிக்கல்கள் வருவதும் இயல்புதான் என்றும் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தமது பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்க்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!