அடி தூள்.. 12 முதல் 18 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி.. தட்டி தூக்கும் தமிழகம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 4, 2021, 12:01 PM IST
Highlights

கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், 12 முதல் 18 வயது வரை உடைவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் அனுமதி கிடைத்த உடன், தமிழகத்தில் தான் அந்த திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், 12 முதல் 18 வயது வரை உடைவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் அனுமதி கிடைத்த உடன், தமிழகத்தில் தான் அந்த திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார்.

சென்னை சைதாப்பேட்டை பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் மேற்கொண்டனர்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், டெங்கு கொசு பாதிப்பு, பரவலாகி வருகிறதென குறிப்பிட்டார். மேலும் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், எல்லையோரங்களில் உள்ள மாவட்டங்களில் கொசு ஒழிப்பிற்கான நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். 

லார்வா கொசுக்களை ஒழிப்பதற்கு கம்பூசியா மீன்கள் வளர்க்கவும், கொசு மருந்துகளை தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்நிலையில் சென்னையில் 3,581 களப்பணியாளர்கள் கொசு ஒழிப்பு, நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல் சென்னையில் 7,589 கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் தேங்கக்க கூடிய தண்ணீரை அகற்றும் பணியில், பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மா.சு. கூறினார். கொசுக்களை அழிக்க, 14,830 புகை அடிக்கும் இயந்திர வாகனம் தயாராக உள்ளதென்றும், இந்த வருடத்தின் 9 மாதங்களில், 83,409 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கூடுதலாக பரிசோதனை செய்வதால் டெங்கு பாத்தித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதென குறிப்பிட்ட மா.சு., அதன்படி 2,930 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். தற்போது 337 பேருக்கே டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று வருவதையும் அவர் விளக்கினார். தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், 12 முதல் 18 வயது வரை உடைவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், மத்திய அரசு அனுமதி அளித்த உடன், தமிழகத்தில் தான் அந்த திட்டம் முதலில் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
 

click me!