இந்தமுறை விட்டா கதை கந்தல்.. நான் மக்களுக்கு செய்த நன்மைகளை எடுத்து சொல்லி ஓட்டு கேளுங்க.. கேப்டன் உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Oct 4, 2021, 11:43 AM IST
Highlights

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் என்பதற்கேற்ப கிராமங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளால் மிகச்சிறந்த ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும், மரத்திற்கு வேர்கள் முக்கியம் என்பது போல நாட்டிற்கும் கழகத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகள்தான் வேர்களாக உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழக நிர்வாகிகள் இரவு பகல் பாராமல் களப்பணி ஆற்றி தேமுதிகவின் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- 

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் என்பதற்கேற்ப கிராமங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளால் மிகச்சிறந்த ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும், மரத்திற்கு வேர்கள் முக்கியம் என்பது போல நாட்டிற்கும் கழகத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகள்தான் வேர்களாக உள்ளது. உள்ளாட்சி அமைப்பு நிலைப்படுத்திக் கொண்டால் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாக மாறும், எனவே தேமுதிக சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நமது கழகத்தின் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அரும்பாடுபட்டு வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். 

இது நமது கட்சியினுடைய மிகப்பெரிய ஒரு பலமாகவும் வலுசேர்க்கும் வகையில் அமையும், தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல் முரசு சின்னத்திற்கு கிடைக்கும்படி வீடு வீடாக சென்று வாக்குறுதிகளை எடுத்துக்கூறி தேமுதிகவிற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும், உள்ளாட்சி அமைப்பின் வெற்றி என்பது ஒரு மிகப்பெரிய ஒரு ஆலம் விழுதுகளுக்கு சமமான ஒரு வெற்றி, கிராமங்கள் எப்போது முன்னேறுகிறதோ, அப்போதுதான் ஒரு நாடு முன்னேற்றம் காண முடியும், கிராமங்களில் நடக்கும் உள்ளாட்சித்தேர்தல்  நாட்டுக்கும் கழகத்திற்கு மிக மிக முக்கியமான ஒரு தேர்தல் எனது கழகத்தை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், இரவு பகல் பாராமல் உழைத்து மாபெரும் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், அந்த வாக்குறுதிகள் மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில், தேமுதிகவினர் வீடுதோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து இதுவரை கேப்டன் செய்த மக்கள் பணிகள் உதவிகள் என அனைத்தையும் எடுத்துக்கூறி வெறும் காசுக்காக மட்டுமில்லாமல், அந்த பகுதியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மக்களுக்கு புரிய வைத்து, தேமுதிகவின் வெற்றியை நிலைநாட்ட வேண்டும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!