பாஜக கூட்டணியான இபிஎஸ் ஆட்சியிலேயே ஆர்எஸ்எஸ் பேரணி நடக்கல.! ஸ்டாலின் ஆட்சியில் அனுமதி-இறங்கி அடிக்கும் சீமான்

By Ajmal Khan  |  First Published Sep 27, 2022, 8:45 AM IST

 பாஜக உறுப்பினர்கள் வீடுகளில் ஏற்படும் குண்டு வீச்சு நிகழ்வுகள், இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக 'எஸ்டிபிஐ' அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தான் செய்கிறார்கள் என்பது போலக் காட்ட முயற்சிக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 


பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழீழ விடுதலைக்காக  12 நாட்கள் உண்ணாநிலை மேற்கொண்டு உயிர் இழந்த  திலீபன் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக ஈகைச் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களே தனது வாகனங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்திக்கொள்வது, தனது இல்லங்களில் குண்டு வீசி வெடிக்கச் செய்வது போன்ற நிகழ்வுகள் கடந்தக்காலங்களில் நடந்துள்ளதாக தெரிவித்தார்.தற்போது பாஜக உறுப்பினர்கள் வீடுகளில் ஏற்படும் குண்டு வீச்சு நிகழ்வுகள், இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக 'எஸ்டிபிஐ' அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தான் செய்கிறார்கள் என்பது போலக் காட்ட முயற்சிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார். 

Tap to resize

Latest Videos

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி

காந்தி பிறந்தநாளான அக்டோபர் 02ஆம் தேதியன்று. எந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே காந்தியைக் கொன்றாரோ, அதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு காந்தியின் பிறந்தநாளன்று பேரணி நடத்துகிறது. நாம் தமிழர் கட்சியோ அல்லது மற்ற அரசியல் இயக்கங்களோ ஒரு கோரிக்கையை முன்வைத்து பேரணி நடத்த அனுமதி கோரினால், பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவார்கள் என கூறியும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க முடியாதென தெரிவித்து பலமுறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் பேரணியை எதிர்த்து அரசு தரப்பு வழக்கறிஞர் பெரிதாக வாதிடவே இல்லை. அக்டோபர் 02ஆம் தேதியன்று 'கிராம சபை' கூட்டம் நடைபெறும் காரணத்தினால், காவலர்கள் அங்குப் பாதுகாப்பு பணிக்குச் சென்றுவிடுவார்கள் அன்பதால் பேரணி நடத்த அனுமதி மறுக்குமாறு வாதிட்டுள்ளார். ஆனால் இதனை ஏற்காத நீதிபதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்துள்ளார். ஆர்எஸ்எஸ் பேரணி இறுதியில் மதக் கலவரங்களை, வன்முறையைத் தூண்டுவது போலப் பேசுவது தான் அதன் நோக்கமாக இருக்கும் என குற்றம்சாட்டினார். 

RSS ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்... உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு!!

பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி

முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி,ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கூட ஆர்.எஸ்.எஸ் பேரணிகள் மறுக்கப்பட்டுள்ளது.  ஆனால் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் இந்த ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசிற்கு 'பேனா' நினைவு சின்னம் அமைக்க பாஜக அனுமதி கொடுக்கிறார்கள், அதற்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இவர்கள் அனுமதிக்கிறார்கள் என நினைக்க வேண்டியுள்ளதாக சீமான் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

மதரீதியில் மக்களை ஆத்திரப்படுத்தி பிளவுபடுத்தும் சங்பரிவார்.! பாஜகவுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆவேசம்

click me!