தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில பகுதிகளில் சில மர்ம நபர்கள், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பாஜக பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, கார், இருசக்கர வாகனங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன.
அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில பகுதிகளில் சில மர்ம நபர்கள், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பாஜக பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, கார், இருசக்கர வாகனங்கள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- RSS ஊர்வலத்துக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்... உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு!!
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். தற்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- முஸ்லிம்களிடம் விளையாடுவது போல் தலித்களிடம் விளையாடாதீர்கள்..! எச்.ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்த திருமாவளவன்