நாட்டிலேயே தடை செய்யக்கூடிய தகுதி உள்ள ஒரே அமைப்பு ஆர்எஸ்எஸ் தான் எனவும் அந்த அமைப்பிற்கு எந்தவித கொள்கையோ நோக்கமோ மக்களின் நலன் சார்ந்து இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கந்துவட்டிக்காரன் ஆட்சி
அஞ்சல் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அஞ்சலக அலுவலகத்தில் அஞ்சலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் கந்து வட்டிக்காரன் ஆட்சி நடைபெறுவதாகவும் கார்ப்பரேட் உரிமையாளர்கள் பெரும் பணக்காரர்களாக இருப்பதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு தவறான பொருளாதார கொள்கையை கடைப்பிடிப்பதால் நாட்டிற்கு தானது எனத் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பணியாளர்களின் பணி பாதுகாப்பு இல்லை ஓய்வூதியம் இல்லை, ஓய்வூதியம் வழங்குவதை தவிர்க்க வயது நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஆட்சியாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் துணையுடன் கோடி கணக்கில் கொள்ளையடித்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.
ஆர்.எஸ்.எஸ் தடை செய்ய வேண்டும்
மக்களை ஓசி பயணம் என்ற பெயரில் அவமானப்படுத்தக்கூடிய திராவிட மாடல் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், ஓடக்கூடிய பேருந்து மக்கள் வரிப்பணத்தில் வாங்கியது தான் எனவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சாமானிய மக்களை மதிப்பதில்லை என குற்றம் சாட்டினார். வருங்காலத்தில் தமிழகத்தில் வடநாட்டுக்காரன் தான் சாத் மே ஹே... என வேலைப்பார்க்க போறான் என தெரிவித்தார். நாட்டிலேயே தடை செய்யக்கூடிய தகுதி உள்ள ஒரே அமைப்பு ஆர்எஸ்எஸ் தான் எனவும் அந்த அமைப்பிற்கு எந்தவித கொள்கையோ நோக்கமோ மக்களின் நலன் சார்ந்து இல்லை என தெரிவித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் இஸ்லாமிய சொந்தங்கள் மாற்று பெயரில் செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி
தமிழகத்தில் மதத்தை தாண்டி மனிதநேயத்துடன் தமிழக மக்கள் இருந்து வருவதாக தெரிவித்தார். மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் பிரிக்க ஆர் எஸ் எஸ் அமைப்புகள், பாஜக முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார் மதத்தையும் ஜாதியையும் தனது இரு கண்களாக வைத்து பாஜக அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். 20,000 புத்தகங்களை படித்ததாக கூறக்கூடிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீண்டாமை இல்லை என கூறுகிறார் ஆனால் 60 ஆயிரம் புத்தகங்களை படித்த அம்பேத்கர் தீண்டாமை இருக்கிறது என தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார் அதனை அவர் படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்