பாசிச சக்திகளை விரட்டி அடிக்க திருமாவுடன் கைகோர்ப்போம்... RSS பேரணிக்கு எதிராக துள்ளி குதித்து வரும் தடாரஹீம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2022, 12:47 PM IST
Highlights

அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற உள்ள சமூக நல்லிணக்க பேரணியில் இந்திய தேசிய லீக் கட்சி கலந்து கொள்ளும் என இந்திய தேசிய லீக் கட்சியில் மாநிலத் தலைவர் தடாரஹிம் அறிவித்துள்ளார். 
 

அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற உள்ள சமூக நல்லிணக்க பேரணியில் இந்திய தேசிய லீக் கட்சி கலந்து கொள்ளும் என இந்திய தேசிய லீக் கட்சியில் மாநிலத் தலைவர் தடாரஹிம் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் முதல் முறையாக ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ளது. இதற்கு அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்த உத்தரவு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடப்பது நல்லது அல்ல, தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுத்துள்ளது. 

விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் , நாம் தமிழர் கட்சி, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இந்த பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அதே அக்டோபர் 2 ஆம் தேதி, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்: திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்.. முதலமைச்சர் தொடங்கி வைப்பு..

இந்நிலையில்  விசிக சமூக நல்லிணக்க பேரணிக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன, இந்த வரிசையில் இந்திய தேசிய லீக் கட்சியின் அந்த பேரணியில் பங்கேற்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர், தடா ரஹீம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்: மோடி அரசுக்கு எதிராக செயல்படும் எல்லா கட்சிக்கும் இதுதான் கதி.. தலையில் அடித்து கதறும் மக்கள் அதிகாரம்.

அக். 2 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடெங்கும் சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்தப் பேரணியில் கட்சி வேறுபாடு பார்க்காமல் சனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இன்றைய சூழலில் இந்த சமூக நல்லிணக்க பேரணி தமிழ் நாட்டிற்கு தேவையானது.

ஆகையால் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் பேரணியில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த பாபாவின் மாணவர்கள் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அமைதி பூங்காவாக உள்ள தமிழ் நாட்டில் பாசிச சக்திகளை விரட்டியடிக்க இந்த பேரணி காலத்தின் கட்டாயம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு ஜனநாயக சக்திகளும் உணர்ந்து இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!