மோடி அரசுக்கு எதிராக செயல்படும் எல்லா கட்சிக்கும் இதுதான் கதி.. தலையில் அடித்து கதறும் மக்கள் அதிகாரம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2022, 12:15 PM IST
Highlights

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மோடி அரசு  விதித்துள்ள 5 ஆண்டுகள் தடையை முறியடிப்போம் என மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்துள்ளது இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மோடி அரசு  விதித்துள்ள 5 ஆண்டுகள் தடையை முறியடிப்போம் என மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்துள்ளது இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ,எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகளின் அலுவலகங்கள் , உறுப்பினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) சோதனை நடத்தியது. இச்சோதனை தொடர்பாக நாடு முழுவதும் அந்த அமைப்புகளைச் சேர்ந்த பலர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:   ரேஷன் கடைகளில் 4,000 காலி பணியிடங்கள்.. உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவு..

அவர்கள் மீது மோடியை கொலை செய்ய முயற்சி செய்வது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.இஸ்லாமிய மக்கள் மீது மிகப்பெரிய கலவரத்தை நடத்தி அவர்களை அழித்தொழிக்கும் திட்டத்தை ஆர்எஸ்எஸ் - பிஜேபி பாசிச பார்ப்பன கும்பல் வைத்திருக்கிறது. அதற்கு இடையூறாக இருக்கக் கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகளை தடை செய்வது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த சோதனை, கைதுகள் நடைபெற்றதாக ஏற்கனவே மக்கள் அதிகாரம் தெரிவித்தது.

இதையும் படியுங்கள்: pfi ban news: பிஎப்ஐக்கு தடை: 2 ஆண்டுக்கு முன்பே சொன்னேன்! அஜ்மீர் தர்ஹா தலைவர் வரவேற்பு

இன்று காலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் ஐந்து ஆண்டுகள் தடை செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராக செயல்படக்கூடிய எந்த ஒரு அமைப்பின் மீதோ அல்லது எந்த ஒரு கட்சியின் மீதோ எப்போதும் எந்த நேரத்திலும்  தடை விதிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை மட்டுமல்ல இந்த நடவடிக்கை ; மாறாக பாசிச மோடிக்கு எதிரான அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளை தடை செய்து ஒழித்துக்கட்டுவதற்கான துவக்கமே இது. வழக்கமான மோடியின் பாசிச நடவடிக்கைகளில் இது ஒன்று என்று கருதாமல் இதற்கெதிராக, அனைத்து முற்போக்கு, ஜனநாயக புரட்சிகர அமைப்புகளும் மக்களும் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!