இவ்வளவு சொத்து இருக்கு..? வீடு இல்லன்னு சொல்றீங்க..? சீமானை கழுவி ஊத்திய நெட்டிசன்ஸ்..

By manimegalai aFirst Published Nov 23, 2021, 9:22 AM IST
Highlights

இத்தனை சொத்து வச்சிக்கீங்க.. ஆனா வாழதற்கு வீடு இல்லை என்று சொல்றீங்களே சீமான் என அவரது சொத்து பட்டியலை ரிலீஸ் செய்து நெட்டிசன்ஸ் அதகளம் செய்திருக்கின்றனர்.

இத்தனை சொத்து வச்சிக்கீங்க.. ஆனா வாழதற்கு வீடு இல்லை என்று சொல்றீங்களே சீமான் என அவரது சொத்து பட்டியலை ரிலீஸ் செய்து நெட்டிசன்ஸ் அதகளம் செய்திருக்கின்றனர்.

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான மறைந்த கடல்தீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சீமான் வழக்கம் போல் ஈழ விடுதலை, கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கைகள், தமிழகத்தில் இப்போது உள்ள ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல விஷயங்களை மேற்கோள்காட்டி நரம்பு தெறிக்க பேசினார்.

பேசிக் கொண்டு வந்த சீமான், திடீரென தமக்கு வாழ வீடே இல்லை, இப்போ இருக்கிற வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க எங்க போவேன் என்று கலங்கி பேசியிருக்கிறார். அதை அங்கு கேட்ட நாம் தமிழர் தம்பிகள் ஒரு கணம் திகைத்து போக… அவரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ இணையத்திலும் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால் சீமான் எதை அடிக்கோடிட்டு காட்டி பேசினார் என்று தெரியவில்லை… நெட்டிசன்கள் சீமானின் சொத்து பட்டிலை வெளியிட்டு நாம் தமிழர் தம்பிகளை கதற வைத்துள்ளனர்.

நாளிதழ் ஒன்றில் சீமானின் சொத்து பட்டியலை ஒருவர் வெளியிட்டு, நாம் தமிழர் தம்பிகளை வாயடைக்க வைத்திருக்கிறார். நெல்லை, சென்னை, கோவை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் சீமானுக்கு இருக்கும் சொத்து விவரங்களை பிரபல நாளிதழ் ஒன்று அப்பட்டமாக வெளியிட்டு இருக்கிறது.

அதை சொல்லிக்காட்டிய ஒருவர் இந்த சொத்துகள் எல்லாம் சீமானுக்கு எப்படி வந்தது? சொல்வரா? என்று கேட்டு அதிர வைத்திருக்கிறார். வேறு ஒருவரோ, கலெக்ஷ்ன் இன்னமும வந்திருக்காது அதான் ஓபனாக மேடையில் வைத்து இந்த விஷயத்தை பேசி இருக்கிறார் என்று விளாசி இருக்கிறார்.

வேறு ஒருவர் நெட்டிசனோ…. திண்டுக்கல்லில் ஏக்கர் கணக்கில் இருக்கும் நிலம், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளிட்ட விவரங்களை இந்தா பிடிச்சுக்கோ என்கிற ரேன்ஜூக்கு போட்டு தாக்கி நாதகவை பெண்டெடுத்து உள்ளார்.

இன்னும் சிலரோ, நாட்டையே ஆட்டைய போட நினைத்த உமக்கு சொத்து இல்லையா? என்று கேள்வியாய் கேட்டு குடைந்திருக்கிறார். சீரியசாக பலரும் பதிவை போட்டு கோபத்தை வெளிகாட்டிக் கொண்டு இருக்கையில் சில நெட்டிசன்களின் குறும்பு பதிவுகளும் குறுக்கே வந்து போகின்றன.

ஒழுங்காக 25 வயசுல வேலைக்கு போயிருந்தா ஏன் இந்த நிலைமை என்று ஒருவர் கமெண்ட் அடித்து அட்ராசிட்டி பண்ணியிருக்கிறார். வீடு இல்லை என்று சொல்லும் போது பரிதாபம் வருகிறது… ஆனால் கருணாநிதி மீது பழி போடுவது தான் நம்புற மாதிரி இல்லை என்று ஒருவர் போட்டு தாக்கி உள்ளார்.

இன்னொரு நெட்டிசனோ… தேர்தல் சமயத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் இருக்கும் சொத்து விவரங்களை எடுத்துக்காட்டி இதெல்லாம் யாருடைய சொத்து என்று அடித்து நகர்த்தி இருக்கிறார்.

டுபாக்கூர் சீமான் என்று அவரை பார்த்து, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கண்டிப்பது போலவும் சிலர் போட்டோவுடன் பதிவிட்டு தெறிக்க விட்டு இருக்கின்றனர். இப்படி ஆளாளுக்கு போட்டு தாக்கும் பதிவுகளுக்கு நாம் தமிழர் தம்பிகளும் பதிலடி கொடுத்துக் கொண்டு வருகின்றனர்.

மேடையில் சந்தர்ப்பம் கிடைக்கும் போது தான் பட்ட கஷ்டங்கள் என்று ஏதாவது ஒன்றை நினைவு கூறுவது சீமானின் ஸ்டைல். அவரின் இந்த பேச்சையும் இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் வழக்கமான அவரது பேச்சை அறிந்தவர்கள்..!

click me!