சீமான் செல்போனிலுமா.. பெகாசஸ் மூலம் தமிழ்நாட்டில் ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் லிஸ்ட்... அம்பலப்படுத்திய தி வயர்!

By Thiraviaraj RMFirst Published Jul 27, 2021, 2:35 PM IST
Highlights

சுமார் 300 தொலைபேசிகள் இஸ்ரேலிய  என்எஸ்ஓ தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்க்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Pegasusசெயலி அரசாங்கங்களுக்கு ​​மட்டுமே விற்கப்படுகிறது

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, த.பெ. திராவிடர் கழகத்தின் கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழகம் குமரேசன், ஆகியோரது தொலைபேசிகளில் பெகாசஸ் உளவுச் செயலி இருந்ததாக 'தி வயர்' இணைய இதழ் அம்பலப்படுத்தி உள்ளது. 

இந்திய எழுத்தாளர்கள், அரசு அதிகாரிகள், உரிமை ஆர்வலர்கள் வணிகர்கள் அரசியல்வாதிகள் என சுமார் 300 தொலைபேசிகள் இஸ்ரேலிய  என்எஸ்ஓ தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்க்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Pegasus செயலி அரசாங்கங்களுக்கு ​​மட்டுமே விற்கப்படுகிறது

உலகெங்கிலும் உள்ள 50,000 தொலைபேசி எண்களின் விவரங்கள் பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டுள்ளன. திருமுருகன் காந்தி குண்டாஸ் சட்டம் மற்றும் பின்னர் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 2018ல் கைது செய்யப்பட்டார். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த திருமுருகன் காந்தி, இலங்கைத் தமிழர்களின் உரிமைகள், ஸ்டெர்லைட் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக பல விஷயங்களில் குரல் கொடுத்து வருகிறார். இலங்கையில் நடந்த போருக்கு எதிராக அப்பாவி தமிழர்களை கொன்றொழித்தலை எதிர்க்கும் வகையில் மே 17, 2009  என்கிற இயக்கத்தை தொடங்கினார். 

2018 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை நீதித்துறைக்கு புறம்பாக கொன்றது தொடர்பான பிரச்சினையை காந்தி எழுப்பியிருந்தார். வெளியுறவுக் கொள்கையில் மாநிலங்களுக்கு அதிக பங்கு வகிக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டு வருகிறார். மேலும் 2018 ல் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை எழுப்பினார். மே 17 சர்ச்சைக்குரிய வர்த்தக வசதி ஒப்பந்தம் (டி.எஃப்.ஏ) கொள்கை குறித்தும் குரல் கொடுத்துள்ளார். “இந்துத்துவத்திற்கு எதிராக குரல் எழுப்புவர்களை அமைதியாக்கவே உளவு பார்க்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக ரீதியாக செயல்படும் சக்திகள் மீதான திட்டமிட்ட, ஜனநாயக விரோத தாக்குதலாக நான் பார்க்கிறேன், ”என்கிறார் திருமுருகன் காந்தி.

 

இலங்கை தமிழர்களுக்காக போராடி வருபவராக அறியப்படுபவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான்.  2019 ஆம் ஆண்டில் இருந்தே இவரது செல்போன் எண் பெகாசஸ் பட்டியலில் உள்ளது. இதுகுறித்து சீமான் கூறுகையில், “நாங்கள் ஒரு மக்கள் இயக்கம். இலங்கை தமிழர்களின் கொலைகளை எதிர்ப்பதில் எங்கள் இயக்கம் மிகவும் ஈடுபட்டிருந்தது. நான் கனடாவிலும், அமெரிக்காவிலும் கைது செய்யப்பட்டுள்ளேன். மேலும் நான் கண்காணிப்பில் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் புலிகள் மறுசீரமைப்பை எளிதாக்குவேன் என்று அரசு கருதுகிறது. நான் கவனிக்கப்படுகிறேன் என்ற உண்மையை நான் நன்கு அறிவேன். இந்த அறிவு இருந்தபோதிலும் நாங்கள் தொடர்ந்து வேலை செய்கிறோம். ஆனால் இது மிகவும் ஜனநாயக விரோத மற்றும் பாசிசமானது, ”என்று அவர் கூறினார்.

இலங்கை போருக்கு ஒரு வருடம் கழித்து 2010 ஆம் ஆண்டில் நாம் தமிழர் கட்சியும் நிறுவப்பட்டது. கட்சி இறுதியில் தன்னை திராவிட எதிர்ப்பு என்று அடையாளப்படுத்திக் கொண்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில், எந்தவொரு இடத்தையும் வெல்லவில்லை என்றாலும், கட்சி 7% வாக்குகளைப் பெற்றது.

திராவிடர் கழகத்திலிருந்து விலகி தந்தை பெரியார் திராவிடர் கழகதில் செயல்பட்டு வருகிறார் கே.ராமகிருஷ்ணன், பல ஆண்டுகால அனுபவங்களைக் கொண்ட மூத்த ஆர்வலர். கொளத்தூர் மணியுடன், ராமகிருஷ்ணன் 2001 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் திராவிடர் கககத்தை தொடங்கினார். 2012 இல் இந்தக் கட்சி பிளவுபட்டது. பெரியாரின் கொள்கைகளை பரப்புவதோடு மட்டுமல்லாமல், தந்தை பெரியார் திராவிடர் கழகமும், தமிழ் தேசியவாதத்தை முன்னிறுத்தி வருகிறது. 

"இது அவசரகாலத்தை விட அதிர்ச்சியூட்டும் மோசமான செயல். முற்போக்கான இயக்கங்களை அடக்குவதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கிறேன். மாநிலத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸை எதிர்ப்பதில் தந்தாய் பெரியார் திராவிடர் கழகம் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இப்படி உளவு பார்ப்பதை பற்றி நாங்கள் அதிர்ச்சியடைந்தாலும், நாங்கள் உண்மையில் ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இந்த பட்டியலில் குமரேசன் உள்ளார், தமிழ்நாட்டின் திமுக மற்றும் அதிமுக இருவரின் பெற்றோர் கட்சியான திராவிடர் கழகத்தின் பொருளாளராக உள்ளார். திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் இந்துத்துவத்திற்கு எதிராக வலுவான, சமரசமற்ற குரலாக இருக்கும்போது நேரடி தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்.

click me!