
பாலியல் வக்கிரம் சீமானின் ஒரு அங்கம் என்றும் சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும், காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி விமர்சித்துள்ளார். நான் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை ஜோதிமணி பார்த்தாரா என சீமான் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் சீமானுக்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். சீமான் மீது தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கூறி வரும் நிலையில் ஏன் அவர் மீது வழக்கு தொடுக்க வில்லை என்றும் ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்ந்து கருத்து மோதல் இருந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி தொடங்கி சோனியா காந்தி வரை சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சமீபத்தில் சீமானை பாலியல் குற்றவாளி என விமர்சித்திருந்தார். அதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், நான் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதை ஜோதிமணி பார்த்தாரா, நான் ஜோதி மணியை தங்கை என்பதைத் தாண்டி வேறு ஒன்றையும் கூறவில்லை, பாலியல் குற்றவாளி இலங்கையில் அமைதிப்படை அனுப்பிய தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய காரணமாக இருந்த ராஜீவ் காந்தி தான் பாலியல் குற்றவாளி.
ஜோதிமணியின் தலைவர் ராஜீவ் காந்தி தான் பாலியல் குற்றவாளி என சீமான் கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜோதிமணி இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ராஜீவ் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான பேசினார். அதற்கு பதில் சொன்ன எனக்கு அவர் தனிப்பட்ட முறையில் ஆபாசமாக பதில் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி சீமான் மீது தொடர்ந்து பாலியல் புகார் அளித்து வருகிறார். ஒருவேளை அதில் உண்மை இல்லை என்றால் ஏன் சீமான் விஜயலட்சுமி மீது மான நஷ்ட ஈடு வழக்கு போடவில்லை. என்னைப் போல அரசியலுக்கு வரும் பெண்கள் மீது ஆபாசமாக தாக்குதல் நடத்தினால் பயந்து ஓடி விடுவார்கள் என நினைக்கிறார்கள். எனக்கு இது ஒன்றும் புதிதல்ல.
அதேபோல் கரூர் தொகுதி மக்கள் மானம் கெட்டு எனக்கு வாக்களித்துள்ளனர் என கூறியுள்ளார். இதற்கு சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் மக்கள் உழைத்து வாழக்கூடியவர்கள், சீமானை போல இலங்கைத் தமிழர்களை சுரண்டி வாழவில்லை, கரூர் மக்கள் குறித்து பேசுவதற்கு சீமானுக்கு எந்த அருகதையும் இல்லை, பாலியல் வக்கிரம் என்பது ஈமானின் ஒரு அங்கம், சீமான் ஒரு பாலியல் குற்றவாளி, பாஜகவின் பி டீல்தான் நாம் தமிழர் கட்சி, இவ்வாறு ஜோதிமணி கடுமையாக விமர்சித்தார்.