நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்..!

Published : Mar 07, 2021, 09:12 PM ISTUpdated : Mar 07, 2021, 09:13 PM IST
நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்..!

சுருக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் சீமான்.  

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. அதற்காக அதிமுக, திமுக ஆகிய தமிழகத்தின் இருதுருவங்களும் கூட்டணி அமைத்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி கொண்டிருக்கும் நிலையில், கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் தனித்து போட்டியிடுகிறது என்பதை ஏற்கனவே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிப்படுத்திவிட்டார்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ஒரே மேடையில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்தார் சீமான். 

பெண்களுக்கு சம அளவிலான ஒதுக்கீடு வழங்கி, 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை களமிறக்கப்பட்டுள்ளனர். சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!