அண்ணாமலை என்ன இசைஞானியா.! தமிழ் தாய் வாழ்த்தின் மெட்டு சரியில்லை எனக் கூற ..? சீறும் சீமான்

By Ajmal Khan  |  First Published May 2, 2023, 8:18 AM IST

கடற்கரையை தங்களது சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருவதாக தெரிவித்த சீமான்,  போராடக்கூடிய இடம் கடற்கரை இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கி நிலையில் புதைப்பதற்கு மட்டும்  நீதிமன்றம் அனுமதி வழங்கியது எப்படி.? என கேள்வி எழுப்பினார்.
 


கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கெடுத்த நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாதியில் நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது தொடர்பாக கருத்து தெரிவித்த அண்ணாமலை, தமிழ்தாய் வாழ்த்து சரியான பாட்டாக இல்லை, டியூனும் மெட்டும் சரியில்லை. இதுவும் நமது தமிழ்தாய் வாழ்த்துவை அவமதிப்பது போல் இருந்தது. பாடல் போட்டதும் மரியாதை கொடுத்து நான் எழுந்து நின்றேன். அதே நேரத்தில் மெட்டும் டியூனும் நம்முடைய லைனில் இல்லையென தெரிவித்திருந்தார்.  இதற்கு தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டம் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு  நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர், தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தவர், பாட்டின் மெட்டு சரியில்லையென கூற அண்ணாமலை என்ன இஞைசானியா என கேள்வி எழுப்பினார். 12 மணி நேர வேலை சட்டம் ரத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், 12 மணி நேர வேலை நேர சட்டத்தை தமிழக அரசு திரும்ப பெறுவதை வரவேற்பதாக கூறிய அவர்,  

கடலுக்குள் பேனா வைப்பது தான் பகுத்தறிவா..? என கேள்வி எழுப்பினார்.  அம்பேத்கரின்  பேனாவை விட இது பெரிய பேனாவா..? ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு பணம் கொடுக்க காசு இல்லை. கடலில் பேனா வைக்க மட்டும்  நிதி எங்கு இருந்து வந்தது என விமர்சித்தார். பேனா வைக்கக்கூடிய இடம் கடல் இல்லை. கடற்கரையை தங்களது சொத்தாக இரண்டு கட்சிகளும் பயன்படுத்தி வருகிறது. போராடக்கூடிய இடம் கடற்கரை இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கி நிலையில் புதைப்பதற்கு மட்டும்  நீதிமன்றம் அனுமதி வழங்கியது எப்படி.? கடலை கடலாக வைத்திருங்கள் என சீமான் கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

தமிழ் தாய் வாழ்த்து பாடலின் மெட்டும், டியூன் சரியில்லாததால் தான் பாதியில் நிறுத்தப்பட்டது..! அண்ணாமலை விளக்கம்

click me!