பெண்களை அவமதிக்கும் திமுக! உங்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை! டிடிவி.தினகரன்

By vinoth kumar  |  First Published May 2, 2023, 6:45 AM IST

பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. 


திமுக மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

திமுக அமைச்சர்கள் பொது மேடைகளில் பேசிய பேச்சுகள் அடுத்தடுத்து சர்ச்சையானது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினே எந்த அமைச்சரையும் பெயரையும் குறிப்பிடாமல் மறைமுகமாக வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன்  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

Latest Videos

சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் மூத்த அமைச்சர் துரைமுருகன்;- உங்கள் பெண் வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். பஸ்சுக்கு அம்மாவிடம் போய் கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே. ஒரு செல்போன் வாங்கி வச்சுக்கோ. அதுல நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு என்று அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம் என்று பேசியிருந்தார். இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனின் பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது.

1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் திரு.துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்?

தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது.

1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் திரு.துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை…

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

இலவசங்கள் தர வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் இவர்களிடம் கேட்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை என டிடிவி.தினகரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

click me!