கர்நாடக தேர்தல் : இடஒதுக்கீடு நடவடிக்கை பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம்.. NDTV கருத்துக்கணிப்பில் தகவல்..

Published : May 01, 2023, 10:46 PM ISTUpdated : May 01, 2023, 10:58 PM IST
கர்நாடக தேர்தல் : இடஒதுக்கீடு நடவடிக்கை பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம்..  NDTV கருத்துக்கணிப்பில் தகவல்..

சுருக்கம்

கர்நாடக தேர்தலில் ஒதுக்கீடு நடவடிக்கை பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம் என்று என்டிடிவி பொதுக் கருத்து கணித்துள்ளது

வேலை மற்றும் கல்வியில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீட்டை லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா மக்களுக்கு வழங்கும் கர்நாடக பாஜக அரசின் முடிவு, 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று NDTV லோக்நிதி-சென்டருடன் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் 33% பேர் மட்டுமே புதிய கொள்கையைப் பற்றி அறிந்துள்ளனர் என்றும், அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பவர்களின் சதவீதம் 30%ஐத் தாண்டவில்லை என்றும் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், பதிலளித்தவர்களில் அதிக சதவீதத்தினர் ஓரளவு கர்நாடக அரசின் இடஒத்துக்கீட்டு முடிவுக்கு ஆதரித்தனர். 

லிங்காயத்துகளுக்கு 45%, ஒக்கலிகாக்களுக்கு 37%, மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு 40-41% இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதற்கு 45% மக்கள் ஆதரவு தெரிவித்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 23% மக்கள் முஸ்லீம்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்வதை முழுமையாக ஆதரித்தனர், மேலும் 25% பேர் ஓரளவு ஆதரவளித்தனர்.

இதையும் படிங்க : அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா..?

கர்நாடகாவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அங்கீகரிக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கான 4% இட ஒதுக்கீட்டை மார்ச் மாதம் கர்நாடக அரசு ரத்து செய்தது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் இந்த 4 % இட ஒதுக்கீடு, லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது.

இதன் மூலம் அரசு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் லிங்காயத் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு 7 சதவீதமாகவும், ஒக்கலிக்கர் சமூகத்தினருக்கான ஒதுக்கீடு 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், பட்டியல் சாதியினருக்கான ஒதுக்கீடு 15%லிருந்து 17% ஆகவும், ST ஒதுக்கீடு 3%லிருந்து 7% ஆகவும் உயர்த்தப்பட்டது. தேர்தலை முன்னிட்டு இதுபோன்ற நடவடிக்கையில் ஆளும் பாஜக இறங்கி இருக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பிரச்சாரம் செய்தனர். 

எவ்வாறாயினும், இந்த முடிவு பஞ்சாரா, போவி, கொரச்சா மற்றும் கோரமா சமூகங்கள் போன்ற விளிம்புநிலைப் பிரிவினரை கோபப்படுத்தியுள்ளது, அவர்கள் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கோருகின்றனர். இந்த கோரிக்கையை தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரித்து வருகின்றன.

கர்நாடகாவில் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பொதுமக்களின் மனநிலையை அறியும் நோக்கில் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது, மேலும் 21 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 82 வாக்குச் சாவடிகளில் 2,143 வாக்காளர்கள் பல கட்டங்களாக நேர்காணல் செய்யப்பட்டனர். மாதிரி அளவு சிறியதாக இருந்தாலும், இது மாநிலத்தின் மக்கள்தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் வாக்காளர்களின் மனநிலையை துல்லியமாக பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : கர்நாடகாவில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வராது.. அமித்ஷா திட்டவட்டம்..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி