பொங்கலுக்கு ராஜஸ்தானில் விடுமுறை இல்லை.! மார்வாடிகள் கொண்டாட்டத்திற்காக தமிழர்கள் இறைச்சி சாப்பிட தடையா-சீமான்

Published : Apr 05, 2023, 08:21 AM IST
பொங்கலுக்கு ராஜஸ்தானில் விடுமுறை இல்லை.! மார்வாடிகள் கொண்டாட்டத்திற்காக தமிழர்கள் இறைச்சி சாப்பிட தடையா-சீமான்

சுருக்கம்

மகாவீரர் திருநாளைக் மார்வாடிகள் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, தமிழர்கள் இறைச்சி உண்ண தமிழக அரசு தடைவிதிப்பதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  

மகாவீரர் ஜெயந்தி- இறைச்சி கடைக்கு தடை

மகாவீரர் ஜெயந்தியை கொண்டாடுவதற்காக இறைச்சிகடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டுமென திமுக அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மகாவீரர் போற்றுதலுக்குரியவர் என்பதிலோ, அவரது திருநாளைக் கொண்டாட வேண்டுமென்பதிலோ எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

அயோத்திக்கு வாங்க.. உங்களை நாங்க பார்த்துக்குறோம் - ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த சாமியார்

பொங்கலுக்கு விடுமுறை இல்லை

ஆனால், அதனைக் காரணமாகக் காட்டி, இறைச்சிக்கடைகளை மூடச்சொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. உணவு என்பது அவரவர் விருப்பவுரிமை; அதில் அரசு தலையிட்டுத் தடைசெய்வது என்பது பாசிசம். இங்கு சமணத்தைத் தழுவி நிற்கும் மார்வாடி மக்களின் உணர்வுக்காகவே இறைச்சிக்கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்படுகிறது. இது கண்டிக்கப்பட வேண்டிய நடவடிக்கை. தமிழர்களின் திருநாளான பொங்கல் பெருவிழாவுக்கு ராஜஸ்தானில் எவ்வித விடுமுறையுமில்லாதபோது, மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக அவர்களது வசதிக்காகவும், உணர்வுக்காகவும் தமிழ்நாட்டிற்குள் இறைச்சிக்கடைகளை மூடுவது சரியானதல்ல!

தமிழக அரசின் எதேச்சதிகாரப்போக்கு

மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, தமிழர்கள் இறைச்சி உண்ண தடைவிதிப்பதென்பது அப்பட்டமான சனநாயகத் துரோகம். 'எல்லோருக்குமான அரசு' எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, ஒரு தரப்பினரை நிறைவுறச் செய்ய தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இறைச்சிக் கடைகளை மூடும் எதேச்சதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

இதையும் படியுங்கள்

நாளொரு கொலை நடந்து சந்தி சிரிக்கும் தமிழக சட்டம் ஒழுங்கு.!யாரை திருப்தி படுத்த பாஜகவினர் கைது- அண்ணாமலை ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!