’எனக்கு ஓட்டுப் போடலைனா ஒருத்தனும் சாப்பிடக்கூடாது.. விஷ ஊசி போட்டுக் கொன்னுடுவேன்...’ அதிர வைக்கும் சீமான்..!

Published : Mar 26, 2019, 02:06 PM IST
’எனக்கு ஓட்டுப் போடலைனா ஒருத்தனும் சாப்பிடக்கூடாது.. விஷ ஊசி போட்டுக் கொன்னுடுவேன்...’  அதிர வைக்கும் சீமான்..!

சுருக்கம்

’’விவசாயி சின்னத்துக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், ஒருவரும் சோறு திங்க கூடாது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

’’விவசாயி சின்னத்துக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், ஒருவரும் சோறு திங்க கூடாது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், வடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் நாடாளுமன்ற கடலூர் வேட்பாளர் சித்ரா, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவஜோதி ஆகியோரை அறிமுகப்படுத்தி விவசாயி சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தார். அப்போது பேசிய அவர், “ ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அப்போலோ மருத்துவமனைக்கு செல்கிறார். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார். அப்படியென்றால், அரசு மருத்துவமனையின் நிலை என்ன..? அரசை நடத்துபவர்களே அரசு மருத்துவமனையை நம்பவில்லை. 

ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 70 நாளில் போன உயிர் 7 நாளில் போயிருக்கும். அரசு மருத்துவமனையில் தரமில்லை. முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் கட்டாயமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என நாங்கள் சட்டம் கொண்டு வருவோம். ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்புமனுவில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகை இல்லை என்கிறார்கள். அப்ப அது யார் கைரேகை..? எப்படி கை ரேகை பெற்றார்கள்..? அவர்கள் மீது என்ன நடவடிக்கை என்ன செய்யப் போகிறார்கள்..? ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை, கட்டி வைத்து தோலை உரித்து விடுவோம். தேர்தல் ஆணையத்திடம் மயில் சின்னம் வேண்டும் என கேட்டேன். அது தேசிய பறவை என்பதால் கொடுக்க முடியாது என தெரிவித்தனர். ஆனால் தேசிய மலரை கொடுத்துள்ளனர். இதுக்கு நான் வழக்குத் தொடர உள்ளேன். விவசாயி சின்னத்துக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், ஒருவரும் சோறு திங்க கூடாது”  என அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!