கொடுத்தும் பறிபோன சின்னம்... டி.டி.வி.,யை தொடர்ந்து வாசன் கட்சிக்கும் ஆப்பு..!

By vinoth kumarFirst Published Mar 26, 2019, 1:42 PM IST
Highlights

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமாகா தஞ்சாவூரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஜி.கே.வாசனுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமாகா தஞ்சாவூரில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஜி.கே.வாசனுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு தஞ்சை தொகுதியை மட்டுமே அதிமுக ஒதுக்கியுள்ளது. தஞ்சை மக்களவை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என்.ஆர். நடராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். கட்சிக்கு தேர்தல் சின்னமாக மிதிவண்டியை ஒதுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்தப்பட்டது.

 

இதனை ஏற்று, மக்களவை தொகுதிக்கு மட்டுமே தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை பயன்படுத்தலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நிபந்தனை விதித்திருந்தார். இந்நிலையில் தமாகாவுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு செய்திருந்தார்.

 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த விவகாரத்தில் உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும் சைக்கிள் சின்னம் வழங்க குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால், மக்களவை தேர்தலில் தஞ்சாவூரில் மட்டும் அக்கட்சி போட்டியிடுவதால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது. இதனையடுத்து இது தொடர்பான வழக்கு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

click me!