அன்புச்செழியன் மரணமடைந்த செய்தி அறிந்த சீமான் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தில்லைப்பட்டினம் கிராமத்திற்கு சென்றார். அவருடன் நாம் தமிழர் கட்சியினரும் ஏராளமானோர் சென்றார். அன்புச்செழியன் வீட்டிற்கு சென்ற சீமான், அங்கு அவரது உடலைப்பார்த்து கண்ணீர் விட்டு கதறி துடித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். இவரது வாகன ஓட்டுநராக நாகப்பட்டினம் மாவட்டம் எருக்கூர் அருகே இருக்கும் தில்லை பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்கிற அன்புசெழியன் பணியாற்றி வந்தார். பொதுக்கூட்டங்களுக்கு செல்லும் போது கட்சி நிகழ்வுகள் சம்பந்தமாக வெளிமாவட்டங்களுக்கு செல்லும்போதும் சீமானின் காரை அன்புசெழியன் தான் ஓட்டி வந்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அன்புச்செழியன், மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அன்புச்செழியன் மரணமடைந்த செய்தி அறிந்த சீமான் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தில்லைப்பட்டினம் கிராமத்திற்கு சென்றார். அவருடன் நாம் தமிழர் கட்சியினரும் ஏராளமானோர் சென்றார். அன்புச்செழியன் வீட்டிற்கு சென்ற சீமான், அங்கு அவரது உடலைப்பார்த்து கண்ணீர் விட்டு கதறி துடித்தார். அவரை அங்கிருந்தவர்கள் தேற்றினர்.
இதனிடையே சீமான் கார் ஓட்டுநர் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இரங்கல் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீமானிற்கு வெறும் வாகன ஓட்டுனராக மட்டுமல்லாது அவரது குறிப்பறிந்து தேவைகளை பூர்த்தி செய்கிற ஒரு தம்பியாக, அவரது உயிர்க்காப்பாளனாக, எப்பொழுதும் புன்னகை மாறாது தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த தம்பியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் அவரது இறுதிச்சடங்கில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
276 இளைஞர்களுடன் 6 இளம்பெண்கள்... நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்..!