தனது சொந்த ஊரான அங்கனூரில் சிவன் கோயில் கட்டி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தனது சொந்த ஊரான அங்கனூரில் சிவன் கோயில் கட்டி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
எனது சான்றிதழ்படி நானே இந்து சமூகத்தை சேர்ந்தவன். அந்த சான்றிதழில் எனக்கு இந்து எனக் குறிப்பிட்டு எனது சமூகத்தின் பெயரை போட்டிருக்கிறார்கள். எனது தாய், தந்தை உற்றார் உறவினர்கள் அனைவருமே இந்துக்கள்தான். சமீபத்தில் எனது ஊரில் உள்ள கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தினேன். நான் தான் முன்னின்று கும்பாபிஷேகத்தை நடத்தி எனது தலையில் தான் குடையை வைத்தார்கள். அய்யய்யோ எனக்கு இது பிடிக்காதே என தட்டிக் கழிக்கவில்லை. எனது தாய் திருநீர் பூசி விட்டார்கள். அவங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என 30க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு எனது தாய் சென்று வேண்டிக்கொண்டுள்ளார். நீ போகாதே என்று நான் சொல்லவே இல்லை. என்னுடைய 20வது வயதில் இருந்தே போய் வந்து கொண்டிருக்கிறார். ஆகையால் எனது தாயாரின் நம்பிக்கை உணர்வை நான் ஒரு நாளும் சிதைத்தது இல்லை.
எங்க ஊரில் சிவன் கோயில் கட்டணும். அதற்கான உதவியை செய்யுங்கள் எனக் கேட்டார்கள். நானே அந்தக் கோயிலை கட்டித் தருகிறேன். அது எனது பொறுப்பு என வாக்குறுதி கொடுத்தேன். இப்போது அங்கனூரில் சிவன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொண்டேன். உங்களுக்கு சிவன் மீது அவர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவர் ஆசிர்வதிப்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நம்பிக்கை உள்ள மக்களை மதிக்க வேண்டும் என்பதில் அக்கறை இருக்கிறது. என் தாய்க்கு அதன் மீது நம்பிக்கை இருக்கிறது. என் உறவினர்களுக்கு அதன் மீது நம்பிக்கை இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் மதம் சார்ந்த உணர்வுகளையும், அந்த மக்களது உணர்வுகளையும் நான் காயப்படுத்த விடும்பவில்லை. என அவர் தெரிவித்துள்ளார். உயரமாக இருந்தால் அது தேவாலயம், கூம்பாக இருந்தால் அது மசூதி, ஆபாசமான, அசிங்கமான சிலைகள் இருந்தால் அது கோயில் என சில மாதங்களுக்கு திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தானே சிவன் கோயில் கட்டுவதாக அவர் கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.