தமிழகத்தில் மதரீதியிலானப் பிளவை ஏற்படுத்த ஆளுநர் முயற்சி... சீமான் பகீர் குற்றச்சாட்டு!!

Published : May 07, 2022, 06:39 PM IST
தமிழகத்தில் மதரீதியிலானப் பிளவை ஏற்படுத்த ஆளுநர் முயற்சி... சீமான் பகீர் குற்றச்சாட்டு!!

சுருக்கம்

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிக ஆபத்தான இயக்கம்  என்று கூறிய தமிழக ஆளுநரின் கருத்துக்கு நாம் தமிழர் கட்டி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிக ஆபத்தான இயக்கம்  என்று கூறிய தமிழக ஆளுநரின் கருத்துக்கு நாம் தமிழர் கட்டி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றப் புத்தக வெளியீட்டு விழாவில்  பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து தெரிவித்தக் கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன. நாடறியப்பட்ட மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக இருப்பதாகவும், ஆபத்தான இயக்கமென்றும் கூறி, அவதூறு பரப்பியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இயற்கைச் சீற்றங்களினால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகும் போதும், கொரோனா நோய்த்தொற்று போன்ற பேரிடர் காலங்களின் போதும் மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதம் காக்க, மக்கள் சேவையாற்றி, வடகிழக்கு மாநிலங்களில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி, உன்னதப் பணிகளைச் செய்து வரும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மீது ஆளுநர் ஆர்.என்.ரவி உமிழ்ந்திருக்கும் கருத்துகள் மிகுந்த உள்நோக்கம் கொண்டவையாகும்.

நோய்த் தொற்றுக் காலத்திலும், கொரோனா ஜிகாத் என இசுலாமிய மக்கள் மீது பழிபோட்டு, மதஒதுக்கலைச் செய்ய முற்பட்டு நாட்டைத் துண்டாட முயலும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை வெளிப்படையாக ஆதரித்து, அதன் உறுப்பினர் போல மாறி நிற்கும் ஆளுநருக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் சேவை செயல்பாடுகளும், பெரும்பணிகளும் தீவிரவாதமாகத் தெரிவதில் வியப்பில்லை. எவ்வித அடிப்படையுமின்றி, அபத்தமான ஒரு வாதத்தை முன்வைத்து, தமிழகத்தில் மதரீதியிலானப் பிளவை ஏற்படுத்த முயலும் ஆளுநரின் நோக்கங்கள் மிக ஆபத்தானவையாகும்.

துளியும் பொறுப்புணர்ச்சியின்றி, ஆளுநரா? ஆர்.எஸ்.எஸ்.ஸின் பரப்புரையாளரா? எனும் கேட்குமளவுக்கு கருத்துகளையும், செயல்பாடுகளையும் வெளிப்படையாக முன்னெடுத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்குகள் யாவும் வெட்கக்கேடானது. ஆளுநர் மாளிகையை சங் பரிவாரங்களின் பரப்புரைக்கூடாரமாக மாற்றி, தமிழகச் சட்டமன்றத்தின் மாண்புகளைக் குலைத்து, நாளும் அதிகாரத்தலையீடும், அத்துமீறலும் செய்து, மதப்பூசலை தமிழகத்திற்குள் ஏற்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்துப் போர் செய்து வென்றிட்ட வீரம்செறிந்த தமிழ்நாடு என்பதை நினைவூட்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபேக் அலுவலகத்தில் ED ரெய்டு.. திடீரென புகுந்த மம்தா.. ஆவணங்கள் மாயம்? பகீர் தகவல்!
அமித் ஷாவின் பேச்சை மீறிய இபிஎஸ்..! தலைக்கு மேல் தொங்கும் கத்தி... அதிமுகவுக்கு சிக்கல்..!