நான் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என தெரியவில்லை.. சட்டசபையில் துரை முருகன் உருக்கம் !

Published : May 07, 2022, 04:53 PM IST
நான் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என தெரியவில்லை.. சட்டசபையில் துரை முருகன் உருக்கம் !

சுருக்கம்

நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என்று எனக்கு தெரியாது, ஆனால் என்னுடைய வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு என் தம்பி ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார். 

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில்  110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின்னர் அதிமுக தவிர்த்து பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி பாராட்டி பேசினர். அப்போது பேசிய துரைமுருகன்,  கடந்த ஓராண்டு காலத்தில் முதலமைச்சர் செய்த பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டு பேசினார். 

‘அப்பாவையே தோற்கடித்த மகனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிற்கிறார்.எங்களோடு கலந்து பேசி இருந்தால் கூட நாங்கள் எதாவது பேசி குழப்பி இருப்போம். தனி ஒருவராக அவர் சிந்தித்து முடிவெடுத்ததால் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். உங்களை வெல்வதற்கு எவராலும் முடியாது.திட்டங்களை தீட்டுவதில் அவற்றை செயல்படுத்துவதில் முதலமைச்சருக்கு திருப்தி ஏற்படுவதில்லை. தண்ணீர் வர வர ஏரி, குளங்கள் நிரம்பி விடும். ஆனால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கடல் நிரம்பாது ஏற்றுக்கொள்ளும்.

கடல் போல திட்டங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் முதலமைச்சரை பிடிக்காத ஆட்கள் யாருமே கிடையாது. டிவியில் பார்த்தால் சிறுவர்கள் குதூகலிக்கிறார்கள்.சாலையில் செல்லும் போது யாராவது சாதாரண ஏழை மனு வைத்துக் கொண்டிருந்தாலும் அந்த தனி மனிதனிடமும் மனுவை பெறும் மகத்தான குணத்தை கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஓடாத தேரையே ஓட வைத்தவர் கலைஞர், செயல்படாத கவர்னரையே செயல்பட வைத்தவர் முதலமைச்சர். ஆட்சி போகும் வரும், ஆனால் திராவிட இயக்க இருக்க வேண்டும். திராவிட இயக்க பற்றுடன் இருப்பவன் நான்.

திராவிட இயக்கத்தை காப்பற்றும் ஒரு ஆண் மகனாக நீங்கள்( முதல்வரை குறிப்பிட்டு) பிறந்திருப்பதில். எனக்கு மகிழ்ச்சி.  தான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என தெரியாது. ஆனால் என்னுடைய வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு என் தம்பி ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என  பேரவையில் உருக்கமாக பேசினார். அப்போது இடையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, எல்லோருடைய வாழ்த்துகளுடன் நோய் நொடி இல்லாமல் நீங்கள் 100 ஆண்டுகள் வரை இருப்பீர்கள்' என்று கூறினார்.

இதையும் படிங்க : திமுகவின் முக்கிய விக்கெட்..தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜகவுக்கு தாவும் எம்.பி திருச்சி சிவா மகன்

இதையும் படிங்க : நான் ஜெயலலிதாவின் போன்று ஆட்சியை தருவேன்.. இபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு திகில் காட்டும் சசிகலா !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!