
30 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரியை நாங்கள் தருவதற்கு தயாராக இருக்கிறோம். நீங்கள் மருத்துவ கல்வியை இலவசமாக தர தயாராக இருக்கிறதா என மத்திய அரசிடம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்விஎழுப்பினார்.
இதுதொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்று மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை விதித்து, மக்களை வாட்டி வதைக்கிறது. இங்குள்ள கிராமங்களில் உழைப்பவர்கள், சொந்தமாக தொழில் செய்பவர்கள் கோடி கணக்கில் சம்பாதிக்கவில்லை. அவர்கள் செய்யும் தொழில், ஊதுபத்தி தயாரிப்பது போன்றவைதான். இதற்கு ஏன் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளனர்.
ஒரு பெட்டி கடை நடத்துபவர், ஏற்கனவே 23 சதவீதம் வரி கட்டுகிறார். இப்போது, 28 சதவீதம். மொத்தம் 51 சதவீதம் ஆகிறது. இதில், அந்த வியாபாரி என்ன லாபம் எடுப்பார். எங்களது வியாபாரிகளுக்கு லாபம் வேண்டாம். அதை நீங்களே எடுத்து கொள்ளுங்கள். அதற்கு பதிலாக ஜிஎஸ்டி வரியை கொடுத்துவிடுங்கள். நீங்கள் சொல்வதுபோல, இந்தியா நிச்சயம் வல்லரசு ஆகும்.
சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி 7 சதவீதம் பிடிக்கிறார்கள். ஆனால், அங்கே தரமான கல்வியை, இலவசமாக தருகிறார்கள். இதை உங்களால் தரமுடியுமா. மருத்துவ கல்வியை இலவசமாக கொடுக்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார்.