
மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்ற தமிழிசை சௌந்தரராஜனின் கருத்துக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
இனிமேலும் மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். அதை இளைஞர்கள் விரும்பவில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.
தமிழிசையின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எதன் அடிப்படையில் மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தமிழிசை கூறுகிறார் என்று தெரியவில்லை. மாநிலங்களே மொழிவாரியாகத்தான் பிரிக்கப்பட்டன. மொழிதான் முதன்மை. மொழியை பிரதானமாக வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும். அதற்கு அடுத்துத்தான் கல்வி, பொருளாதாரம், மருத்துவம் போன்ற தேவைகள், அரசியல் ரீதியான கொள்கைகள் எல்லாம்.
மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றால், மதத்தை வைத்து மட்டும் அரசியல் செய்யலாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.