அந்த சீக்ரெட்ஸ் தெரியுமா? எகிரும் சசிகலா தரப்பு..! பதறும் மாஜி அமைச்சர்கள்..!

By Selva KathirFirst Published Jun 16, 2021, 11:34 AM IST
Highlights

வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அங்கிருந்த பல்வேறு பொருட்கள், ஆவணங்கள் பெட்டி பெட்டியாக எடுத்துச் செல்லப்பட்டன. அவை எங்கு சென்றன? யாரால் எடுத்துச் செல்லப்பட்டன? என்பது பற்றிய விசாரணையின் முடிவில் எவ்வித விடையும் கிடைக்கவில்லை. 

சசிகலாவிற்கு அரசியல் ரீதியாக பெரிய அளவில் செல்வாக்கு இல்லை என்றாலும் அதிமுகவில் தற்போது உயர் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் சாதாரண கிளைச் செயலாளர்கள் வரை பலரின் ரகசியம் அவருக்கு அத்துப்படி என்பதால் கட்சி நிர்வாகிகள் இடையே நாளுக்கு நாள் கலக்கம் அதிகரித்து வருகிறதாம்.

கடந்த 2017ம் ஆண்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அந்த சோதனை நடைபெற்ற பிறகு அந்த வீட்டிற்குள் சசிகலா தொடர்புடைய யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அங்கிருந்த பல்வேறு பொருட்கள், ஆவணங்கள் பெட்டி பெட்டியாக எடுத்துச் செல்லப்பட்டன. அவை எங்கு சென்றன? யாரால் எடுத்துச் செல்லப்பட்டன? என்பது பற்றிய விசாரணையின் முடிவில் எவ்வித விடையும் கிடைக்கவில்லை. வருமான வரித்துறை மட்டும் அல்லாமல் தமிழக போலீசாரும் கூட மேற்கொண்ட முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே தான் சசிகலா மறுபடியும் அரசியல் களம் புகுவதற்கு தனது ஆடு புலி ஆட்டத்தை துவக்கியுள்ளார். தற்போதைய சூழலில் அதிமுகவை கைப்பற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை சசிகலா புரிந்து வைத்துள்ளார். அதிமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டுள்ளதையும் அவர் தெரிந்தே வைத்துள்ளார். அதனால் தான் நேரடியாக அரசியல் களத்திற்கு வராமல் அதிமுக நிர்வாகிகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மேலிடத்திற்கு குடைச்சல் கொடுக்கும் பாதையை அவர் தேர்வு செய்துள்ளார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர்களின் சீக்ரெட்ஸ்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று தினரகன் தரப்பு மிரட்ட ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். அதுவும் போயஸ் கார்டனில் இருந்து 2017ம் ஆண்டு பெட்டி பெட்டியாக கொண்டு செல்லப்பட்டவை அனைத்துமே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை பலரது சீக்ரெட் அடங்கிய சிடிக்கள், பென்டிரைவ்கள், உளவுத்துறை கோப்புகள் என்கிறார்கள். இவை தற்போதும் பத்திரமாக புதுச்சேரியில் ஒரு பண்ணை வீட்டில் பாதுகாக்கப்படுவதாக சொல்கிறார்கள். இவற்றைத்தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சின்னம்மா சீக்ரெட்ஸ் என்று தங்களுக்குள் பேசிக் கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது என்று சென்னையில் மாஜி அமைச்சர் ஒருவர் வீட்டில் கடந்த சில நாட்களாகவே ரகசிய மீட்டிங் நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். சீக்ரெட்டுகள் வெளியானால் அரசியல் ரீதியாக மட்டும் அல்ல தனிப்பட்ட முறையிலும் குடும்ப அளவிலும் கூட பாதிப்புகள், பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் இந்த மிரட்டலை எதிர்கொள்ள தயாராவது குறித்து இரவும் பகலுமாக பல்வேறு திட்டங்கள் யோசிக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் இந்த சீக்ரெட்ஸ்களை வெளியிடும் அளவிற்கு சசிகலா மோசமான அரசியல் செய்யமாட்டார் என்றும் ஆனால் அதே அளவிலான நாகரீகத்தை முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் தன்னளவிலும் வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்ப்பார் என்கிறார்கள். அது நடக்கவில்லை என்றால் தான்? என்று கூறி ட்விஸ்ட்டும் வைக்கிறார்கள்.

click me!