கல்லூரிகளில் கட்டாய ஆங்கில வழி கல்வி... வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 16, 2021, 11:25 AM IST
Highlights

ஆந்திராவில் அதிக அளவு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கட்டாய ஆங்கில வழி கல்வியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்புகிறது. 

ஆந்திர மாநில்த்தில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கட்டாய ஆங்கில வழி கல்வி முறையை உருவாக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் கல்வித் துறைஅமைச்சர் ஆதிமூலபு சுரேஷ் மற்றும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அப்போது, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இண்டர்மீடியட் படிப்புக்கு பின்னர், பட்டப்படிப்புகள் அனைத்தும் ஆங்கில வழியில் மட்டுமே கற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதற்கான உத்தரவும் நேற்று வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

 இந்நிலையில்ஆந்திராவில் அதிக அளவு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கட்டாய ஆங்கில வழி கல்வியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்புகிறது. மேலும்  மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்க life skill course அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன்  முன்னதாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கட்டாயமாக்கியது.

click me!