
சட்டசபைக்குள் குட்கா எடுத்துவந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு சட்டசபை செயலர் பதிலளித்துள்ளார்.
சட்டசபைக்குள் குட்கா கொண்டுவந்ததற்காக 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
எம்.எல்.ஏக்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சட்டசபை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து சட்டசபை செயலர் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில், தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலத்தை சட்டசபையில் காட்டியதால் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உரிமைக்குழு கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எம்எல்ஏக்கள் பதிலளிக்க போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு முடிவு எடுக்கவில்லை. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், அதில் அவர்கள் பங்கேற்காமல் இருக்க நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.