திமுகவுடன் ரகசிய தொடர்பா..? சத்தியம் செய்யும் மக்கள் நீதி மய்ய நிர்வாகி..!

By Thiraviaraj RMFirst Published Jan 5, 2021, 2:37 PM IST
Highlights

உதயநிதியும் கமல்ஹாசனும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்கள். 20 சீட் கொடுப்பதாக தி.மு.க.வில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் தமிழகம் முழுக்கவே பேச்சாக இருக்கிறது. 

உதயநிதியும் கமல்ஹாசனும் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்கள். 20 சீட் கொடுப்பதாக தி.மு.க.வில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் தமிழகம் முழுக்கவே பேச்சாக இருக்கிறது. ஆனால், அப்படியொரு பேச்சுவார்த்தை நடக்கவே இல்லை என்று உறுதியுடன் தெரிவிக்கிறார் மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ்.

இதுகுறித்துப் பேசும் முரளி அப்பாஸ், ‘இந்த நான்கு நாள் பிரச்சாரத்தில், நான் முதலமைச்சராவதற்கு வாய்ப்பு அளியுங்கள் என்று கமல் கேட்கிறார். மக்கள் நீதி மலரும்போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள் என்கிறார். என்னென்ன செயல்கள் செய்வேன் என்கிறார். இதனையெல்லாம் உதயநிதியோ, திமுகவோ ஒத்துக்கொள்ளும் என்று நினைத்தால் குழந்தைத்தனம்.


 
மக்கள் கவனம் திரும்பி எங்களுக்கான வாய்ப்பைக் கொடுக்க யாரும் யோசிக்கக்கூடாது என்பதற்காக, இவர் என்று இருந்தாலும் திமுக கூட்டணிக்குப் போய்விடுவார் என்ற எண்ணத்தை உருவாக்குவதற்காகச் செய்யப்பட்ட ஒரு யுக்தி. இந்த யுக்தியை இப்போதுள்ள இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சி செய்தது என்று தெரியவில்லை. ஆனால், இந்த நிமிடம் வரையிலும் தி.மு.க.வுடன் கமல்ஹாசன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று உறுதி அளித்துள்ளார். அடேங்கப்பா, அதற்குள் தி.மு.க.வினர் எப்படியெல்லாம் கதை அளக்கிறார்கள்.

click me!