தமிழகத்தில் இன்று இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... 46 ஆயிரம் பதவிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது!

By Asianet TamilFirst Published Dec 30, 2019, 7:20 AM IST
Highlights

இந்தத் தேர்தலில் வாக்களிக்க 1.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஊரகப் பகுதிகளில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். இத்தேர்தலில் 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. 25,008  வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக சுமார் 46 ஆயிரம் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல்  தொடங்கியது.


தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் டிச.27, டிச.30 ஆகிய நாட்களில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.அதன்படி 45 ஆயிரம் பதவிகளுக்கு டிச. 27 அன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. சுமார் 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த இத்தேர்தலில் 76.19 வாக்குகள்  பதிவானது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 46 ஆயிரம் உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் தேர்தல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தமாக 46, 639 பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு மாலை மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


இந்தத் தேர்தலில் வாக்களிக்க 1.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஊரகப் பகுதிகளில் 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். இத்தேர்தலில் 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. 25,008  வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் என 61 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு கட்டங்களாகப் பதிவாகும் வாக்குகள் ஜன. 2 அன்று எண்ணப்பட உள்ளன. 

click me!