இபிஎஸ்ம் – ஓபிஎஸ்ம் ஜெயலலிதாவைவிட பெரியவங்களா ? அதிமுகவைவிட்டு வெளியேறும் முக்கிய புள்ளி ….

Published : May 02, 2019, 11:06 PM IST
இபிஎஸ்ம் – ஓபிஎஸ்ம் ஜெயலலிதாவைவிட பெரியவங்களா ? அதிமுகவைவிட்டு வெளியேறும் முக்கிய புள்ளி ….

சுருக்கம்

தொடர்ந்து தான் புறக்கணிப்படுவதாகவும், முதலமைச்சர் எடப்பாடியும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ம் ஜெயலலிதாவைப் போல் நடந்து கொள்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ள கோவை முன்னாள் அமயர் செ.ம.வேலுச்சாமி அதிமுகவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்ட அதிமுகவில் சீனியரான செ.ம.வேலுச்சாமி ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.மீது கடும் அதிருப்தியில் இருப்பது அண்மைக் கால அவரது செயல்பாடுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2012-ல் கோவை மேயராக இருந்த செ.ம.வேலுச்சாமியை ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டு அவரது மேயர் பதவியை ஜெயலலிதா பறித்தார். அன்று முதல் லைம்லைட்டில் இருந்து ஒதுங்கியே இருந்த அவர், சூலூர் இடைத்தேர்தல் மூலம் மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொண்டார். கிட்டதட்ட செ.ம.வேலுச்சாமிக்கு தான் சீட் என கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கந்தசாமிக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தனர் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.
 
இதனால் மன விரக்தியடைந்த செ.ம.வேலுச்சாமி, இதற்கு மேலும் தாம் அதிமுகவில் இருக்க வேண்டுமா என தனது ஆதரவாளர்களிடம் கேட்டாராம். மேலும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தங்களை அம்மா என நினைத்துக்கொண்டார்களா என பொங்கியுள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகலாமா என ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சிலர் செ.ம.வேலுச்சாமியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

ங்களுக்கு உரிய மரியாதை உரிய நேரத்தில் தரப்படும் என அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதை நம்பாத செ.ம.வெளிச்சாமி அமமுக அல்லது திமுகவில் இணையலாமா என யோசித்து வருவதாக தகவ்ல வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!