
சாரண - சாரணியர் தலைவர் தேர்தலுக்கான தேர்தலில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, எதிர்த்து போட்டியிட்ட மணியிடம் தோல்வியடைந்தார்.
சாரண - சாரணியர் இயக்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பள்ளி கல்வி முன்னாள் இயக்குநர் மணி என்பவரும், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் போட்டியிட்டனர்.
இதற்கான தேர்தல் இன்று காலை சென்னையில் உள்ள சாரண, சாரணிய இயக்க அலுவலகத்தில் துவங்கியது.
இந்த நிலையில், சாரண - சாரணியர் தேர்தல் பிற்பகல் சுமார் 2 மணியளவில் நிறைவடைந்தது.
சாரண - சாரணியர் தலைவர் பதவிக்கு, பாஜகவின் தேசிய செயலாளர் தலைவராவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.
இந்த நிலையில், இன்று சாரண சாரணியர் தலைவர் தேர்தலுக்கான போட்டி இன்று நடைபெற்றது.
போட்டி முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டன. இதில், ஹெச். ராஜா, எதிர்த்து போட்டியிட்ட மணியிடம் தோல்வியடைந்துள்ளார்.