justiceforpontharani எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.!

By vinoth kumarFirst Published Nov 14, 2021, 11:41 AM IST
Highlights

இன்றைய இழப்பு தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்பு என்று பார்க்காமல், எனது சொந்த மகள் இந்த நிலைமைக்கு ஆளாகி இருந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பேனோ அந்த விதத்தில் மிகவும் துக்ககரமான நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளோம். 

போக்சோ சட்டம் குறித்து அரசு பள்ளியை போல் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு எற்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக மாணவி பொன் தாராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு துண்டிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட பொன் தாரணியின் பெற்றோருக்கு  பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மின்சாரத்துறை மற்றும்  ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பெற்றோரின் கையை பிடித்து ஆறுதல் கூறினர். பள்ளி ஆசிரியர், முதல்வர் இருவரையும் கைது செய்துவிட்டோம். எல்லோரும் மீதும் சட்டப்படி நடவடிக்கடி எடுக்கப்படும். உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாது என்று கூறி மாணவியின் பெற்றோரிடம் அமைச்சர்கள் தெரிவித்தனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்;- இன்றைய இழப்பு தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்பு என்று பார்க்காமல், எனது சொந்த மகள் இந்த நிலைமைக்கு ஆளாகி இருந்தால் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பேனோ அந்த விதத்தில் மிகவும் துக்ககரமான நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளோம். பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்கிற முறையில் இதற்கான நீதிவிசாரணை சரியான முறையில் நடக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

இந்த குற்றத்தில் தொடர்புடைய ஆசிரியரை கைது செய்துள்ளோம். பள்ளி முதல்வரையும் உடனடியாக கைது செய்துள்ளோம். 24 மணி நேரத்திற்குள் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளோம். பெற்றோருக்கும், உறவினருக்குமான கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. போக்சோ சட்டம் குறித்து அரசு பள்ளியை போல் தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு எற்படுத்தப்படும். பாலியல் தொல்லைக்கு ஆளானால் மாணவர்கள் அரசின் உதவி எண்ணிற்கு அழைக்கலாம். எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக அதில் தொடர்பு கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் மத்தியிலும் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது.

click me!