சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மதுபாலன்(34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மதுபாலன்(34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நெருக்கமாக பழகி வந்த இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். தனிமை கிடக்கும் போதெல்லாம் எல்லை மீறியுள்ளனர்.
இந்நிலையில் மாணவி கடந்த சில நாட்களாகவே சோர்வுடன் காணப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்த போது நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மதுபாலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.