ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தும், புகார் கூறியும் வருகிறார்.
அதானியும், பிரதமர் மோடியும் நண்பர்கள் என்பதை மறுக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தும், புகார் கூறியும் வருகிறார். இந்நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்;- எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது. தைரியமாக போட்டியிட வேண்டியதுதானே. எதற்காக புகார் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
ஆளுங்கட்சி சந்திக்கின்ற முதல் இடைத்தேர்தலில் என்பதால் அரசு சும்மாவா இருக்கும். தன்னுடைய முழு பலத்தையும் காட்டத்தானே செய்வார்கள். அதிமுக ஆட்சியில் இடைத்தேர்தல் வந்தபோது அமைச்சர்கள் எல்லாம் வீட்டிலேயே இருந்தார்கள்? என ப.சிதம்பரம் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, மாநில அரசுகளை நீக்குவது கிடையாது. எதிர்க்கட்சியில் இருக்கின்ற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிவிடுகின்றனர். அதானியும், பிரதமர் மோடியும் நண்பர்கள் என்பதை மறுக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கூறியுள்ளார்.