இது திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவுக்கு இருக்கு! ஏதாவது செய்யுங்கள்! ஆளுங்கட்சியால் அலறும் ஜெயக்குமார்.!

By vinoth kumar  |  First Published Feb 10, 2023, 4:04 PM IST

ஆலந்தூர் காவலர் கொல்லப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கு பாதுகாப்பு இல்லை. திரைப்படங்கள் போல தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. எங்கள் ஆட்சியில் காவல் துறை என்றால் மிடுக்கு இருக்கும். இன்று அப்படி இல்லை.  தர்ம அடி வாங்கும் காவல் துறையாக உள்ளது.


இரட்டை இலை சின்னத்தை போய் மவுசு குறைந்தது என்று சொல்வது சரி அல்ல. ஈனத்தனமான பிறவிகள் இன்னும் மாறவில்லை என  டிடிவி.தினகரனை கடுமையாக ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் ஆளும் திமுக அரசு ஜனநாயக அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று,  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த கூட்டத்திற்கு யாரும் செல்ல கூடாது என்பதற்காக அதை தடுக்க பல இடங்களில் சட்ட விரோதமாக பந்தல்கள் அமைத்து 1000 ரூபாய் பணம், உணவு கொடுத்தார்கள். இது திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. 

Tap to resize

Latest Videos

திமுக ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் மற்றும் அவர் மகன் இருவர் தவிர 30 அமைச்சர்களும் ஈரோட்டில் தான் முகாமிட்டு உள்ளனர். ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளருக்கு மகத்தான வெற்றி பெறுவார். இரட்டை இலை சின்னத்தை போய் மவுசு குறைந்தது என்று சொல்வது சரி அல்ல. ஈனத்தனமான பிறவிகள் இன்னும் மாறவில்லை. டிடிவி.தினகரன் நன்றி கெட்டவர் என  விமர்சித்தார். சசிகலா, டிடிவி , ஓபிஎஸ் ஆகியோரை புரட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்றார்.

பொய் சொல்வதற்கு அளவு உள்ளது. தேர்தல் வாக்குறுதியை 85% நிறைவேற்றியதாக முதலமைச்சர் சொல்கிறார். கல்விக் கடன் ரத்து செய்தார்களா?  நீட் ரத்து செய்தீர்களா? பயிர் நாசமானது பார்க்காமல் உள்ளனர் என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து, ஜனநாயக அமைப்பில் புகார் கொடுப்பது என்பது அடிப்படையான உரிமை. நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம் தேர்தல் கமிஷனுக்கு மேல் நீதிமன்றம் உள்ளது என்றார்.

ஆலந்தூர் காவலர் கொல்லப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கு பாதுகாப்பு இல்லை. திரைப்படங்கள் போல தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. எங்கள் ஆட்சியில் காவல் துறை என்றால் மிடுக்கு இருக்கும். இன்று அப்படி இல்லை.  தர்ம அடி வாங்கும் காவல் துறையாக உள்ளது என்று ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

click me!